இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
ரஹமத்துல்லாஹ் முஹம்மது சயானி | |
---|---|
இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் | |
பதவியில் 1896–1897 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 200px 5 ஏப்ரல் 1847 பம்பாய், இந்தியா |
இறப்பு | 6 சூன் 1902 பம்பாய், இந்தியா | (அகவை 55)
இளைப்பாறுமிடம் | 200px |
பெற்றோர் |
|
வேலை | கல்வியாளர்,வழக்கறிஞர், அரசியல்வாதி |
ரஹமத்துல்லாஹ் முஹம்மது சயானி Rahimtulla M. Sayani (5 ஏப்ரல் 1847 - 6 ஜூன் 1902) இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக சுரேந்திரநாத் பானர்ஜி அவர்களுக்கு அடுத்ததாக இருந்தவர்.
இந்தியாவின் சுதந்திரத்திற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் 1847 ஆம் ஆண்டு ரஹமத்துல்லாஹ் முஹம்மது சயானி பிறந்தார், ஆகா கானை பின்பற்றக்கூடிய சீடர்களாக இருந்த கோஜா முஸ்லீம் சமூகத்தில் பிறந்தவர் இவர்.
1885 ஆம் ஆண்டில் பம்பாயில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் முதலாவது மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய முஸ்லீம்களில் இருவரில் இவரும் ஒருவராக இருந்தார், அன்றைய தின அமர்வில் இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவராக உமேஷ் சந்தர் பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
இவர் ஒரு மேற்கத்திய கல்விமானாக இருந்தார், மக்கள் மதிக்கத்தக்க, நுட்பமான திறன் கொண்ட ஒரு வழக்கறிஞரராகவும் அவர் பம்பாய் நகரத்தில் இருந்தார்.
1896 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் 12 வது வருடாந்திர மாநாட்டில் காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரஸில் தலைவராக தேந்தெடுக்கப்பட்ட இரண்டாவது முஸ்லிம் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதலாமவர் பத்ருதீன் தியாப்ஜி.
1902 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் இறப்பெய்தினார்.[2]
ஒரே தேசியமாக ஒன்றாக இணைந்து வளர்ச்சி மற்றும் ஒற்றுமை உணர்வை வளர்க்கவும், ஒருங்கிணைக்கவும், இந்தியா என்பது ஒரு நாடு மட்டுமல்ல, பல்வேறு இனங்கள் மற்றும் கலாச்சாரங்கள் ஒன்றினைந்த கலவையான மதங்களின் ஒரு கூட்டம்." 1896 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய மாநாட்டில் இவரின் தாராக மந்திரமாக இருந்தது.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பட்டியல்
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)