வல்லம்படுகை சிறீனிவாச ராகவன் அருணாச்சலம் (V. S. R. Arunachalam) இந்திய விஞ்ஞானி மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் முன்னாள் தலைவர் ஆவார். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சிந்தனைக் குழுவான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையத்தின் நிறுவனர் மற்றும் தலைவராக இருந்தார்.
பத்மபூசண், பத்மவிபூசண் ஆகிய விருதுகளைப் பெற்றார். பாபா அணு ஆராய்ச்சிக் கழகத்திலும், தேசிய வானூர்தி ஆய்வகத்திலும், இராணுவ ஆராய்ச்சி நிறுவனங்களிலும் பணிபுரிந்தார். இந்திய அரசின் இராணுவ ஆராய்ச்சித் துறையில் ஆலோசகராகப் பணியாற்றினார்.
அருணாசலம் 10 நவம்பர் 1935 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதியன்று பிறந்தார்.[1] அறிவியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். 1965 ஆம் ஆண்டில் வேல்சு பல்கலைக்கழகத்தில் பொருளறிவியல் மற்றும் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
ராகவன் அருணாச்சலம் 2023 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 16 ஆம் தேதியன்று தன்னுடைய 87 ஆவது வயதில் கலிபோர்னியாவில் இறந்தார்.[2][3]