ராகுல் சர்மா (Rahul Sharma (born 20 July 1987 என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார்.மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், முதல் தரத் துடுப்பாட்டம் ஆகிய உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். மேலும் இவர் 2006 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2010 ஆம் ஆண்டில் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமான இவர் 2011 ஆம் ஆண்டில் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார். இவர் தற்போது வரை 22 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 538 ஓட்டங்களையும் , 35 பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 126 ஓட்டங்களையும் ,4 ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 1 ஓட்டங்களையும் 2 பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 3 இலக்குகளையும் கைப்பற்றியுள்ளார்.துவக்கத்தில் வேகப் பந்து வீச்சாளராக இருந்த இவர் பின் சுழற்பந்து வீச்சாளரானார்.[1]
இவர் 2006 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.டிசம்பர் 25 ஜலாவர் துடுப்பாட்ட அரங்கத்தில் ராஜஸ்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் பஞ்சாப் துடுப்பாட்ட அணி சார்பாக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.பின் 2014 ஆம் ஆண்டில் தன்பத் துடுப்பாட்ட அரங்கத்தில் சார்கண்ட் மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் பஞ்சாப் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.
2010 ஆம் ஆண்டில் இவர் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமானார். பெப்ரவரி 10 ரோடக் துடுப்பாட்ட அரங்கத்தில் அரியானா துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் பஞ்சாப் அணி சார்பாக பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.பின் 2013 ஆம் ஆண்டில் செப்டமபர் 15 பெங்களூர் துடுப்பாட்ட அரங்கத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அ அணிக்கு எதிரான பட்டியல் அ போட்டியில் இவர் இந்திய அ அணி சார்பாக விளையாடினார்.
2009 ஆம் ஆண்டில் இவர் இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.அக்டோபர் 20 தில்லி துடுப்பாட்ட அரங்கத்தில் அரியானா துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் பஞ்சாப் அணி சார்பாக இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.பின் 2014 ஆம் ஆண்டில் மே 3 தில்லி துடுப்பாட்ட அரங்கத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இருபது20 போட்டியில் இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.
2011 ஆம் ஆண்டில் இவர் சர்வதேச துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். டிசம்பர் 8 இந்தூர் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இந்தியத் துடுப்பாட்ட அணி சார்பாக தனது முதல் போட்டியில் விளையாடினார். பின் 2012 ஆம் ஆண்டில் சூலை 28 கொழும்பு துடுப்பாட்ட அரங்கத்தில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இவர் இந்தியத் துடுப்பாட்ட அணி சார்பாக இறுதியாக விளையாடினார்.
2012 ஆம் ஆண்டில் இவர் பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.பெப்ரவரி 1, சிட்னி துடுப்பாட்ட அரங்கத்தில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் இந்திய அணி சார்பாக பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.பின் 2012 ஆம் ஆண்டில் பெப்ரவ்ரி 3 மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கத்தில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் இந்தியத் துடுப்பாட்ட அணி சார்பாக இறுதியாக விளையாடினார்.[2]
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 நிறைவுகள் வீசி 7 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இழப்புகளைக் கைப்பற்றினார். தற்போது வரை ஐபிஎல்லின் சிறந்த சிக்கனமான பந்துவீச்சாக இது உள்ளது.[3][4][5]