ராகுல் ரவீந்திரன் | |
---|---|
பிறப்பு | ராகுல் ரவீந்திரன் சூன் 23, 1981 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2010 - தற்போது |
வாழ்க்கைத் துணை | சின்மயி |
ராகுல் ரவீந்திரன் (Rahul Ravindran, பிறப்பு: 23 சூன் 1981) என்பவர் ஒரு இந்திய நடிகராவார். இவர் தமிழ், ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் முதன் முதலாக நடித்துள்ளர். விண்மீன்கள் மற்றும் சூர்ய நகரம் ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கன.
இவர் மே 06, 2014 அன்று பிரபல பின்னணிப் பாடகியான சின்மயி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்தில் கலந்து கொண்டவர்களிடம், மணமக்கள் பரிசு பொருள் எதுவும் வாங்கவில்லை. அதற்கு பதில், லடாக்கில் உள்ள மலை சாதியினரின் பள்ளிக்கு கட்டிடம் கட்ட உதவும்படி கேட்டுக்கொண்டனர்.[1]
ஆண்டு | திரைப்படம் | திரைப்படம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2010 | மாஸ்கோவின் காவிரி | மாஸ்கோ | தமிழ் | |
2012 | விண்மீன்கள் (திரைப்படம்) | ஜீவா | தமிழ் | |
சூர்ய நகரம் | வெற்றிவேல் | தமிழ் | ||
ஹவுஸ் ஆப் அபான்ட்டுநெட் ரோபட்ஸ் | சித்தார்த் | ஆங்கிலம் | ||
ஆந்தால ராட்ஷசி | கௌதம் பிரகாஸ் | தெலுங்கு | பரிந்துரை சிறந்த துணை நடிகருக்கான சிம்மா விருது ஆண் | |
2013 | வணக்கம் சென்னை | தீபக் | தமிழ் | |
நேனேம்…சின்ன பில்லனா?[2] | கிரிஷ் | தெலுங்கு | ||
பெள்லி புஸ்தகம் | ராகுல் சிறீவாஸ் | தெலுங்கு | படபிடிப்பில் |