ராகேஷ் திவாரி (Rakesh Tewari (பிறப்பு:2 அக்டோபர் 1953) இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக 2014 முதல் 2017 முடிய பணியாற்றியவர்.[1]இவர் முன்னர் உத்தரப் பிர்தேச மாநிலத் தொல்லியல் துறையின் இயக்குநராக 1988 முதல் 2013 முடிய இருந்தவர்.[2][3]இவர் தலைமையில் உத்தரப் பிரதேசத்தின் சந்த் கபீர் மாவட்டத்தில் சரயு ஆறு பாயும் லகர்தேவா[4] எனுமிடத்தில் தொல்லியல் அகழாய்வு செய்த போது, கிமு 7,000 காலப்பகுதியில் இவ்விடத்தில் மக்கள் நெல் வேளாண்மை செய்ததை கண்டுபிடித்தார்.[5]நடு கங்கைச் சமவெளிப் பகுதியில் மக்காள் இரும்பு பயன்படுத்தியதை தொல்லியல் அகழாய்வுகள் மூலம் கண்டுபிடித்தார். இவருக்குப் பின் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக உஷா சர்மா என்பவர் பதவியேற்றார்.[6]