ராசா (P130) மலேசிய மக்களவைத் தொகுதி நெகிரி செம்பிலான் | |
---|---|
Rasah (P130) Federal Constituency in Negeri Sembilan | |
ராசா மக்களவைத் தொகுதி (P130 Rasah) | |
மாவட்டம் | சிரம்பான் மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 158,131 (2023)[1][2] |
வாக்காளர் தொகுதி | ராசா தொகுதி |
முக்கிய நகரங்கள் | ராசா, சிரம்பான், லாபு, ரந்தாவ் |
பரப்பளவு | 234 ச.கி.மீ[3] |
முன்னாள் நடப்பிலுள்ள தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1984 |
கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
மக்களவை உறுப்பினர் | சா கீ சின் (Cha Kee Chin) |
மக்கள் தொகை | 256,585[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1986 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
ராசா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Rasah; ஆங்கிலம்: Rasah Federal Constituency; சீனம்: 亚沙国会议席) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P130) ஆகும்.[5]
ராசா மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1986-ஆம் ஆண்டில் இருந்து ராசா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
சிரம்பான் மாவட்டம், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் ஒன்றாகும். சிரம்பான் மாவட்டத்தின் முக்கிய நகரம் சிரம்பான் நகரம். அதுவே நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரமும் ஆகும்.
கோலாலம்பூர் பெருநகரில் இருந்து தெற்கே 54 கி.மீ. தொலைவிலும்; மலாக்கா நகரில் இருந்து 86 கி.மீ. தொலைவிலும்; ஜொகூர் பாரு நகரில் இருந்து 270 கி.மீ. தொலைவிலும்; அமைந்து உள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்ட சிரம்பான் மாநகராட்சி; சிரம்பான் மாவட்டம் முழுவதையும் உள்ளடக்கியது. 1 சனவரி 2020-இல் சிரம்பான் மாநகராட்சி; மற்றும் நீலாய் நகராட்சி ஆகிய இரு மன்றங்களும் ஒன்றிணைக்கப் பட்டன. அதன் மூலம் சிரம்பான் மாநகராட்சி உருவாக்கப்பட்டது. சிரம்பான் மாநகரத்தின் மையப் பகுதிகள்; சிரம்பான் மாநகராட்சியின் அதிகார வரம்பிற்குள் வருகின்றன.
ராசா மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1984-ஆம் ஆண்டில் ராசா தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
7-ஆவது மக்களவை | P108 | 1986–1990 | கு செப்பாங் (Hu Sepang) |
ஜனநாயக செயல் கட்சி |
8-ஆவது மக்களவை | 1990–1995 | வோங் சி வா (Wong See Wah) |
பாரிசான் நேசனல் (மலேசிய சீனர் சங்கம்) | |
9-ஆவது மக்களவை | P118 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | கோ சியோ குவாட் (Goh Siow Huat) | ||
11-ஆவது மக்களவை | P130 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | அந்தோனி லோக் (Anthony Loke) |
பாக்காத்தான் ராக்யாட் (ஜனநாயக செயல் கட்சி) | |
13-ஆவது மக்களவை | 2013–2018 | தியோ கோக் சியோங் (Teo Kok Seong) | ||
14-ஆவது மக்களவை | 2018–2022 | சா கீ சின் (Cha Kee Chin) |
பாக்காத்தான் அரப்பான் (ஜனநாயக செயல் கட்சி) | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
சா கீ சின் (Cha Kee Chin) | பாக்காத்தான் அரப்பான் | 81,434 | 68.04 | 4.41 ▼ | |
நிங் கியான் நாம் (Ng Kian Nam) | பாரிசான் நேசனல் | 19,447 | 16.25 | 1.26 ▼ | |
டேவிட் சோங் வீ கிங் (David Chong Vee Hing) | பெரிக்காத்தான் நேசனல் | 18,810 | 15.72 | 15.72 | |
மொத்தம் | 1,19,691 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 1,19,691 | 98.98 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 1,237 | 1.02 | |||
மொத்த வாக்குகள் | 1,20,928 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 1,55,896 | 76.78 | 7.48 ▼ | ||
பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
மூலம்: [8] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)