பிறப்பு | தமிழ்நாடு |
---|---|
வதிவு | இந்தியா |
தேசியம் | இந்தியன் |
துறை | வேதியியல் |
நிறுவனம் | தியாகராஜர் பொறியியல் கல்லூரி |
Alma mater | சென்னைப் பல்கலைக்கழகம் |
அறியப்பட்டது | கழிவு மேலாண்மை நெகிழி சாலை |
பரிசுகள் | பத்மஸ்ரீ |
ராஜகோபாலன் வாசுதேவன், (Rajagopalan Vasudevan) முக்கியமாக மேலாண்மை குறித்த அறிவியல் ஆராய்ச்சியாளர் ஆவர். இவர் தற்பொழுது மதுரையில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார்.[1] சிறந்த, அதிக நீடித்த மற்றும் மிகவும் செலவு குறைந்த சாலைகளை உருவாக்க நெகிழிக் கழிவுகளை மறுசுழற்சி மூலம் பயன்படுத்தும் புதுமையான முறையை இவர் உருவாக்கினார். நெகிழிக் கழிவுகளைத் துண்டாக்குதல், பிற்றுமின் கலத்தல் மற்றும் சாலை கட்டுமானத்தில் பாலிமரைஸ் செய்யப்பட்ட கலவையைப் பயன்படுத்துதல் போன்ற யோசனைகளை இவர் முன்னெடுத்தார். இந்த முறையில் சாலைகளை மிக விரைவாக உருவாக்குவதோடு ஆபத்தான நெகிழிக் கழிவுகளிலிருந்து சுற்றுச்சூழலையும் நாம் காப்பாற்றலாம். ஏப்ரல் 15, 2008 அன்று மகாத்மா பள்ளிகளையும் பார்வையிட்டார். பலத்த மழையால் ஏற்படும் சேதங்களுக்கு எதிராக இந்த நெகிழிச் சாலைகள் பாதுகாப்பாக உள்ளன.[2] [3] [4] [5] இவரது சாலை கட்டுமான முறை இப்போது கிராமப்புற இந்தியாவில் சாலைகள் கட்டமைப்பில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.[6] இவருக்கு 2018ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த பொதுவாழ்வில் சேவையாற்றியவர்களுக்கு வழங்கப்படும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது . [7]
1965 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முறையே இளநிலை அறிவியல் மற்றும் எம்.எஸ்சி பட்டம் பெற்றார். 1974ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் 1975ல், தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார், 1998ல் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். [8]
இவரது ஆராய்ச்சி முக்கியமாகக் கழிவு மேலாண்மை, குறிப்பாகச் சாலை மற்றும் கட்டிடக் கட்டுமானங்களுக்கு நெகிழிக் கழிவுகளைப் பயன்படுத்துவது குறித்ததாகும்.[9][10][11]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)