ராஜிவ் மேனன் | |
---|---|
பிறப்பு | 20 ஏப்ரல் 1963 கொச்சி, கேரளம், இந்தியா |
இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | சென்னைத் திரைப்படக் கல்லூரி |
பணி | ஒளிப்பதிவாளர், ஒளிப்பதிவாளர், இயக்குநர் (திரைப்படம்), ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர் |
வாழ்க்கைத் துணை | லதா மேனன் |
ராஜீவ் மேனன் (பிறப்பு: ஏப்ரல் 20, 1963) ஓர் இந்திய திரைப்படத் தயாரிப்பாளர். இவர் பல இந்திய மொழி திரைப்படங்களில் இயக்குநராகவும் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். மணி ரத்னத்தின் படமான பாம்பே (1994) திரைப்படத்தின் மூலம் பிரபலம் ஆனார். பின்னர் ராஜிவ், குரு (2007) மற்றும் கடல் (2013) உள்ளிட்ட பிற திரைப்படங்களில் மணி ரத்னத்துடன் பணியாற்றி வந்தார். இவர் இரண்டு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட தமிழ் படங்கள் இயக்கியுள்ளார் மின்சார கனவு (1997) மற்றும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000). கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.[1][2][3] கடைசியாக சர்வம் தாளமயம் திரைப்படத்தைத் தயாரித்து இயக்கினார்.
படங்களிலிருந்து அப்பாற்பட்டு, ராஜிவ் ஒரு முன்னணி இந்திய விளம்பர இயக்குநராக உள்ளார். மேலும் ராஜீவ் மேனன் புரொடக்ஷன்ஸ் மற்றும் மைண்ட்ஸ்கிரீன் பிலிம் இன்ஸ்டிடியூட்டை நடத்தி வருகிறார். இந்நிறுவன் ஆவணப்படங்கள், விளம்பர படங்கள் மற்றும் சினிமா ஆகியவற்றிற்கான உபகரணங்களை வழங்குகிறது.[4][5]
ராஜீவ் மேனன் கேரளாவின் கொச்சினில் மலையாள மொழி பேசும் குடும்பத்தில் பிறந்தார். கடற்படை அதிகாரியாக தனது தந்தையின் பணி விளைவாக, மேனனுக்கு மிக இளம் வயதிலேயே இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வாழ வாய்ப்பு கிடைத்தது. இவரது தாயார் பிரபல பின்னணி பாடகி கல்யாணி மேனன். இவரது சகோதரர் தற்போது இந்திய ரயில்வே சேவையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
ஒரு இளைஞனாக இவர் மேற்கொண்ட பயணங்களின் விளைவாக, ராஜிவ் கடற்படைத் தளத்தில் தி கன்ஸ் ஆஃப் நவரோன் (1961) போன்ற போர் படங்களின் குழுத் திரையிடல்களைத் தவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க முடியவில்லை. அவரது குடும்பம் விசாகப்பட்டினத்திற்கு சென்றதும், இவர் சினிமா மீது அதிக ஆர்வம் காட்டினார். மேலும் இந்தி மற்றும் மலையாள படங்களான சாஹிப் பிபி அவுர் குலாம் (1962), செம்மீன் (1965), நிர்மல்யம் (1973), யாதோன் கி பராத் (1973 ) போன்ற படங்கள் அவருக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது.[6] ராஜிவ் தனது பதினைந்தாவது வயதில் சென்னைக்கு குடி பெயர்ந்தார்.[7] இந்த காலகட்டத்தில் அவரது தந்தையின் மரணம் அவரின் வாழ்க்கை வழிகாட்டலுக்கு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியது. அவருக்கு "எலி பந்தயத்தில்" சேர்க்கும் ஒரு வேலையைச் செய்ய விரும்பவில்லை. தி இந்துவில் வேலை செய்யும் அவரது பக்கத்து வீட்டுகாரர் தேசிகன் ராஜிவுக்கு தன்னிடம் இருந்த இன்னொரு நிழற்படக்கருவியை கொடுத்தார். இதனால் புகைப்படத்தில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. சென்னைத் திரைப்படக் கல்லூரியில் அனுமதி பெற்ற பிறகு, அவர் திரைப்படத் தொழிலை நுணுக்கமாக ஆராயத் தொடங்கினார். வங்காள இயக்குனர்களான சத்யஜித் ராய் மற்றும் மிருணால் சென் மற்றும் தமிழ் இயக்குநர்களான பாலு மகேந்திரா மற்றும் மகேந்திரன் ஆகியோரின் பணிகளை தீவிரமாகப் பின்தொடர்ந்தார்.
ராஜிவ் மேனன் சக விளம்பர இயக்குனரான சென்னையைச் சேர்ந்த லதாவை மணந்தார்.[8] இவர்களுக்கு சரஸ்வதி மற்றும் லட்சுமி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். ராஜிவ் இசை இயக்குனர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இயக்குனர் மணி ரத்னம் ஆகியோரை தனது நெருங்கிய நண்பர்கள் என்று வர்ணித்துள்ளார். மேலும் அவர்கள் இவருக்கு தொழில் ரீதியாக ஊக்கமளிப்பதாகவும் பரிந்துரைத்துள்ளார்.[7]
வருடம் | தலைப்பு | மொழி(கள்) | மற்றவை | பணி |
---|---|---|---|---|
1997 | மின்சார கனவு | தமிழ் | ஆம் | நடிகர் (தாமஸின் பணியாளர்) |
2000 | கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | தமிழ் | ஆம் | நடிகர் |
2019 | சர்வம் தாளமயம் | தமிழ் | ஆம் | இசையமைப்பாளர் (ஒரு பாடலுக்கு) |
வருடம் | தலைப்பு | மொழி(கள்) | ஒளிப்பதிவாளர் | நடிக்குக்கும் பணி | மேற்கோள் |
---|---|---|---|---|---|
1991 | சைத்தன்யா | தெலுங்கு மொழி | ஆம் | இல்லை | |
1992 | செலுவி | கன்னடம் | ஆம் | இல்லை | |
1995 | பம்பாய் | தமிழ் | ஆம் | இல்லை | |
1998 | ஹரிகிருஷணன்ஸ் | மலையாளம் | இல்லை | குப்தன் | |
2004 | மார்நிங் ராகா | ஆங்கிலம் | ஆம் | இல்லை | |
2007 | குரு | இந்தி | ஆம் | இல்லை | |
2013 | கடல் | தமிழ் | ஆம் | இல்லை | |
2020 | சுமோ | தமிழ் | ஆம் | இல்லை |