முந்தைய பெயர்கள் | அருணாசல் பல்கலைக்கழகம் |
---|---|
குறிக்கோளுரை | அறிவு பூரணத்தை அளிக்கிறது |
வகை | பொது |
உருவாக்கம் | 4 பிப்ரவரி 1984 |
துணை வேந்தர் | சாகேத் குஷ்வாஹா |
கல்வி பணியாளர் | 209 |
நிருவாகப் பணியாளர் | 256 |
மாணவர்கள் | 994 |
அமைவிடம் | ரோனோ மலை, தோய்முக்கு , , 27°08′50″N 93°46′01″E / 27.14722°N 93.76694°E |
வளாகம் | கிராமப் புரம் |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக்குழு, இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம், பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு |
இணையதளம் | www |
ராஜீவ்காந்தி பல்கலைக்கழகம் (Rajiv Gandhi University) இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள ஒரு பழமையான பல்கலைக்கழகமாகும். முன்னர் இது அருணாசல் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்பட்டு வந்தது. மாநில தலைநகரான இட்டா நகரிலிருந்து ஒன்பது மைல் தொலைவில் உள்ள தோய்முக்கு நகரில் ரோனோ மலையில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. 1984ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் இந்தப் பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 2005ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி இந்த மாநிலத்திற்கு வருகை தந்தபோது இப்பல்கலைக்கழகம் ராஜீவ்காந்தி பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[1]
ராஜீவ்காந்தி பல்கலைக்கழகம் 9 ஏப்ரல் 2007 முதல் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் ஒரு மத்திய பல்கலைக்கழகமாக இருந்து வருகிறது. இந்தப் பல்கலைக்கழகம்,பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்றுள்ளது.[2]
2020ஆம் ஆண்டின் படி இப்பல்கலைக்கழகத்துடன் 36 கல்லூரிகள் இணைவுப் பெற்றக் கல்லூரிகளாக இருந்தன.[3] அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள கல்லூரிகள் முன்னர் வடகிழக்கு மலை பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளாக இருந்தன. இவற்றில் குறிப்பிடத்தக்கன:
அருணாசல் பனோரமா எனும் அருணாச்சலப் பிரதேச பன்முகத்தன்மைக் குறித்த கலாச்சார விழா
துணைவேந்தர் கோப்பைக்கான கல்லூரிகளுக்கு இடையேயான இளைஞர் விழா.[சான்று தேவை]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)