ராஜு லாமா Raju lama | |
---|---|
லாமா 2015-ல் | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 16 மார்ச்சு 1978 பருவா, சிந்துபால்சோக், பாக்மதி மாநிலம், நேபாளம் |
இசை வடிவங்கள் | வெகுசன இசை |
தொழில்(கள்) | பாடகர், பாடலாசிரியர் |
இசைக்கருவி(கள்) | வாய்ப்பாட்டு, கிதார் |
இசைத்துறையில் | 1993–முதல் |
வெளியீட்டு நிறுவனங்கள் | மியூசிக் நேபாள், ரியாசு மியூசிக், கிரிசு கிரியேசன்சு |
இணைந்த செயற்பாடுகள் | மங்கோலியன் இதயம் |
இராஜு லாமா (நேபாளி: राजु लामा; பிறப்பு 16 மார்ச் 1978) என்பவர் நேபாள பாடகர்-பாடலாசிரியர் ஆவார். இவர் மங்கோலியன் இதயம் என்ற இசைக்குழுவின் முக்கிய பாடகர் ஆவார். இவரது பணி நேபாளி, திபெத்தியன், தமாங் மற்றும் பிற மொழிகளில் பாடல்களை உள்ளடக்கியது.[1][2][3][4][5] லாமா தற்போது அமெரிக்கா மற்றும் நேபாளத்தில் வசித்து வருகிறார். தி வாய்ஸ் ஆஃப் நேபாளில் பயிற்சியாளர்களில் இவரும் ஒருவர்.[6]
சிந்துபால்சௌக்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு லாமா உதவினார்.
மே 16, 2022 அன்று, இவர் எவரெஸ்ட் சிகரத்தின் (8,848.86 மீ) உச்சியை அடைந்தார்.[8] 'ராஜு லாமா எவரெஸ்ட் குறிக்கோள்' என்ற தலைப்பில், பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த மலையேற்றம் நடத்தப்பட்டது. கார்பன் உமிழ்வைக் குறைக்கவும், மலைகளில் வாழும் மக்களின் வாழ்க்கையை நேரடியாக எவ்வாறு இது பாதிக்கிறது என்றும் அறிய இவர் அழைப்பு விடுத்தார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, இவர் முகாம் 2 மற்றும் முகாம் 3க்கு இடையில் 6574 மீ உயரத்தில் 'மியூசிக் ஃபார் எ காஸ்- ஒரு நோக்கத்திற்கான இசை' என்ற தனிக் கச்சேரியையும் நிகழ்த்தினார்.[9]