ராஜேஷ் நந்தினி சிங் | |
---|---|
பதினைந்தாவது மக்களவையின் உறுப்பினர் | |
பதவியில் 2009–2014 | |
முன்னையவர் | தல்பத் சிங் பரசுதே |
பின்னவர் | தல்பத் சிங் பரசுதே |
தொகுதி | ஷாதோல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | வில். பிர்ரா, பிலாஸ்பூர் மாவட்டம் | 23 மார்ச்சு 1957
இறப்பு | 8 மே 2016 | (அகவை 59)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | தல்பீர் சிங் |
பிள்ளைகள் | 1 மகள், 1 மகன் |
பெற்றோர் |
|
கல்வி | இளம் அறிவியல் |
முன்னாள் கல்லூரி | ரவி சங்கர் விஸ்வவித்யாலயா Raipur, |
As of 9, 2012 மூலம்: [[1]] |
ராஜேஷ் நந்தினி சிங் ( Rajesh Nandini Singh ) (23 மார்ச் 1957 - 8 மே 2016) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். சத்தீசுகரின் ஜாஞ்சுகிர்-சாம்பா மாவட்டத்தில் உள்ள பிர்ரா கிராமத்தில் திவான் துர்கேஷ்வர் சிங், ராஜ்குமாரி பானு குமாரி தேவி ஆகியோரின் மூன்றாவது குழந்தையாக அம்பாகர் சௌகியின் அரச வீட்டில் பிறந்தார். 2009 தேர்தலில் மத்தியப் பிரதேசத்தின் ஷாதோல் மக்களவைத் தொகுதியிலிருந்து பதினைந்தாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] முன்னதாக 1993-1998 காலகட்டத்தில் மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
அரசியல்வாதியான தல்பீர் சிங்கை மணந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு, தீவிர அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டார். இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். [3] இவரது மகள் ஹிமாத்ரி சிங் நவம்பர் 2016 இல் ஷாதோல் தொகுதியில் மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
ராஜேஷ் நந்தினி சிங் மே 2016 இல் தனது 59 வது வயதில் மாரடைப்பால் இறந்தார். [4]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)