ராஜ்குமார் சேதுபதி | |
---|---|
பிறப்பு | சென்னை |
செயற்பாட்டுக் காலம் | 1980–1988 2013-தற்போதும் |
பெற்றோர் | சண்முக ராஜேஸ்வர சேதுபதி, லீலா ராணி |
வாழ்க்கைத் துணை | ஸ்ரீபிரியா (1988- தற்போதும்) |
பிள்ளைகள் | ஸ்நேகா, நாகர்ஜுன் |
ராஜ்குமார் சேதுபதி (Rajkumar Sethupathi) ஒரு தென்னிந்திய நடிகராவார். பெரும்பாலும் தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்கிறார். சுமார் 50 மலையாள படங்களில் நடித்துள்ளார். எம்.பாஸ்கர் இயக்கிய சூலம் என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.[1] 1981 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான த்ரிஷ்ணா வில் மம்முட்டியுடன் நடித்தார். 1982 ஆம் ஆண்டில் பி.வேணு இயக்கிய ராஜா என்ற மலையாளத் திரைப்படத்தில் முன்னணி நடிகராக நடித்தார்.
ராஜ்குமார் சென்னையில் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர். இவர் திரைப்படத் தாயரிப்பாளரான சண்முக ராஜேஸ்வர சேதுபதி மற்றும் லீலா ராணி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். தமிழ் நடிகை லதா இவரது மூத்த சகோதரியாவார். தென்னிந்திய திரைப்பட கூடத்தில் இரண்டு ஆண்டுகள் நடிப்பு சார்ந்த படிப்புகளை முடித்துள்ளார். 1988ல் நடிகை ஸ்ரீபிரியாவை மணந்தார்.இந்த தம்பதிகளுக்கு மகள் சினேகா மற்றும் மகன் நாகார்ஜுன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2013 ல் வெளியான மாலினி 22 பாளையங்கோட்டை என்ற திரைப்படத்தை தயாரித்தார். இந்த திரைப்படத்தை இவரது மனைவி ஸ்ரீபிரியா இயக்கினார்.
வருடம் | திரைப்படம் | கதாப்பாத்திரம் |
---|---|---|
1981 | த்ரிஷ்னா | |
1981 | பூச்ச சன்யாசி | |
1981 | பார்வதி | மஹேந்திர வர்மா |
1982 | அரஞ்ஞானம் | ராஜேஷ் |
1982 | ஆச | லால் |
1982 | ஆக்ரோசம் | |
1982 | கலுமரம் | |
1982 | பூவிரியும் புலரி | ஜானி |
1982 | இன்னில்லெங்கில் நாள | |
1982 | எனிக்கும் ஒரு திவசம் | ஹம்சா |
1982 | ஒடுக்கம் தொடக்கம் | |
1982 | அனுராக கோடதி | ரவி |
1982 | வரன்மாரே அவஸ்யமுண்டு | |
1983 | ரதிலயம் | |
1983 | ஆஸ்தி | கிருஷ்ணமூர்த்தி |
1983 | பூகம்பம் | |
1983 | பரஸ்பரம் | ஈசாக் |
1983 | காட்டறிவி | |
1983 | ஹலோ மெட்ராஸ் கேர்ல் | |
1983 | ஒன்னு சிறிக்கு | ராஜு |
1983 | மஹாபலி | |
1983 | தாளம் தெட்டிய தாரத்து | |
1984 | உன்னி வந்த திவசம் | |
1984 | கிருஷ்ணா குருவாயூரப்பா | |
1984 | தத்தம்ம போச்சா போச்சா | |
1984 | வெப்ராளம் | |
1984 | விகடகவி | |
1984 | ஜீவிதம் | சந்திரன் |
1984 | கரிம்பு | |
1984 | பூமரத்தே பெண்ணு | ஆனந்த் |
1985 | கரிநாகம் | |
1986 | இத்ரமாத்ரம் | ரவி |
1988 | பீகரன் | |
1988 | அதிர்த்திகள் |
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் |
---|---|---|
1980 | சூலம் | |
1980 | உச்சக்கட்டம் | |
1983 | காஷ்மீர் காதலி | |
1983 | உண்மைகள் | |
1983 | வில்லியனூர் மாதா | |
1984 | அன்புள்ள ரஜினிகாந்த் | |
1985 | ஜெயின் ஜெயபால் | |
1986 | ஆயிரம் பூக்கள் மலரட்டும் | |
1987 | காதல் பரிசு |
வருடம் | திரைப்படம் | கதாப்பாத்திரம் |
---|---|---|
1984 | மானசவீனா |
வருடம் | திரைப்படம் |
---|---|
2013 | மாலினி 22 பாளையங்கோட்டை |
2015 | பாபநாசம் (திரைப்படம்) |