ராணா (Rana) (சமசுகிருதம்: राणा நாட்டின் ராஜாவை குறிக்கும் சொல்லாகும். முதன்முதலில் இராசபுத்திர குல மன்னர்கள் தங்கள் பெயருக்குப் முன்னால் அல்லது பின்னால் ராணா என சூட்டிக் கொண்டார்கள்.[1]பின்னர் இப்பட்டத்தை இந்தியா மற்றும் நேபாளம் பகுதிகளை ஆண்ட பல்வேறு இராசபுத்திர குல மன்னர்கள் இப்பட்டத்தை தங்கள் பெயருக்குப் பின் சூட்டிக்கொண்டனர். ராணா சாகிப், ராணாஜி, ராணா பகதூர் மற்றும் மகாராணா போன்ற பெயர்கள், ராணா என்ற சொல்லிருந்து தோன்றியதே.
ராணா பட்டம் மேற்கு இந்தியாவை ஆண்ட இராசபுத்திர குலங்களின் முடியாட்சி மன்னர்களுக்கு அளிக்கப்பட்ட விருதாகும்.[2]
முன்னாள் நேபாள இராச்சியத்தின் ராணா வம்ச பரம்பரை பிரதம அமைச்சர்கள், 1846 முதல் தங்கள் பெயருக்குப்பின் ராணா என்ற பட்டத்தை சூட்டுக் கொள்ளும் வழக்கம் இருந்தது. [3][4]