நேபாள பிரதம அமைச்சர் ராண ஜங் பாண்டே | |
---|---|
श्री मुख्तियार काजी साहेब रणजङ्ग पाँडे | |
நேபாள பிரதம அமைச்சர் ராணா ஜங் பாண்டே | |
மூன்றாவது பிரதம அமைச்சர் | |
முன்னையவர் | பீம்சென் தபா |
பின்னவர் | ரங்கநாத் பௌடியால் |
பதவியில் 1837–1837 | |
பதவியில் 1839–1840 | |
முன்னையவர் | புஷ்கர் ஷா |
பின்னவர் | ரங்கநாத் பௌடியால் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கிபி 1789 காட்மாண்டு |
இறப்பு | 18 ஏப்ரல் 1843 காட்மாண்டு |
தேசியம் | நேபாளி |
பிள்ளைகள் | பதர்ஜங், தேக்ஜங், சமர்ஜங், சூம்செர்ஜங் |
பெற்றோர் | தாமோதர பாண்டே |
ராணா ஜங் பாண்டே (Rana Jang Pande) (நேபாளி: रणजङ्ग पाँडे), நேபாள இராச்சியத்தின் மூன்றாவது பிரதம அமைச்சராக பணியாற்றியவர். நேபாள பிரதம அமைச்சராக இருந்த தாமோதர பாண்டேவின் மகன்களில் ஒருவராவார்.[1][2]
இவர் நேபாளத்தின் பிரதம அமைச்சராக இரு முறை பதவி வகித்தவர். முதன் முறையாக 1837ம் ஆண்டிலும், இரண்டாம் முறையாக 1839–1840 ஆண்டுகளில் பணியாற்றியவர்.
நேபாள பிரதம அமைச்சராக பணியாற்றிய பீம்சென் தபாவை கைது செய்த பிறகு, ராணா ஜங் பாண்டே, நேபாள இராச்சியத்தின் பிரதம அமைச்சராகவும், தலைமைப் படைத்தலைவராகவும் பதவி வகித்தார்.
ராணா ஜங் பாண்டே, ஒருங்கிணைந்த நேபாள இராச்சியத்தை நிறுவும் பணியில் இருந்த கோர்க்கா மன்னர் இருந்த பிரிதிவி நாராயணன் ஷாவின் அரசவையில் பிரதம அமைச்சராக பணியாற்றிய கலு பாண்டேவின் மகன் ஆவார்.
1804ல் தன் தந்தையும், பிரதம அமைச்சருமான தாமோதர பாண்டேவின் மரணத்திற்கு, பீம்சென் தபா பொறுப்பானவர் எனக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{citation}}
: CS1 maint: unrecognized language (link){{citation}}
: Check date values in: |date=
(help){{citation}}
: CS1 maint: unrecognized language (link)