ராணி ஜெயராஜ் | |
---|---|
பிறப்பு | ராணி ஜெயராஜ் திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
உயரம் | 1.75 m (5 அடி 9 அங்) |
அழகுப் போட்டி வாகையாளர் | |
பட்டம் |
|
தலைமுடி வண்ணம் | கருப்பு |
விழிமணி வண்ணம் | கருப்பு |
முக்கிய போட்டி(கள்) |
|
ராணி ஜெயராஜ், இந்தியாவின் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குண்டல் என்ற சிறுகிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட, விளம்பர நடிகையாவார். 1996 ஆம் ஆண்டில் பெமினா மிஸ் இந்தியா அழகுப்போட்டியில் பட்டம் வென்றவர் என்ற சிறப்பைக் கொண்டவர். 2017 ஆம் ஆண்டில் மிஸஸ் இந்தியா சவுத் ஆப்ரிக்கா அழகுப் போட்டியிலும் வென்றுள்ளார்.[1]
ஜாம்பியா நாட்டில் ஆசிரியர்களாக பணியாற்றிய நடுத்தர வர்க்க கிறிஸ்தவ குடும்ப பெற்றோருக்கு பிறந்த இவரது பதின்மூன்றாம் வயதில் தென் ஆப்ரிக்காவிற்க்கு குடிபெயர்ந்தனர்.[2] தொடர்ந்து இடைநிலைக் கல்வி பயில, இந்தியாவின் பெங்களுருவில் உள்ள பிஷப் காட்டன் பெண்கள் பள்ளியில் வந்து, ஐஎஸ்சி தேர்வில் சிறப்பாக தேர்ச்சியும் பெற்றுள்ளார். தொடர்ந்து பத்திரிகை துறையில் ஈடுபாடு கொண்டு அதற்காக ஆங்கிலம், உளவியல் மற்றும் பத்திரிகை படிப்புகளை முதன்மையாகக் கொண்டு கல்லூரியில் பயின்று வந்துள்ளார். நாடகம், ஆடல் மற்றும் பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளில் சிறப்பாக பங்கேற்று வந்த ராணியை, எதிர்பாராத விதமாக விளம்பரத்துறையில் இருக்கும் ஒரு [3] புகைப்படக்கலைஞரால் கண்டறியப்பட்டு அழகுப்போட்டிகளில் கலந்துகொள்ள தொடங்கினார். 1996 ஆம் ஆண்டில் நடைபெற்ற பெமினா மிஸ் இந்தியா அழகுப்போட்டியில் முதலாவதாக வந்து வென்றுள்ளதோடு, அதே ஆண்டு நடைபெற்ற பெமினா மிஸ் வேர்ல்ட் அழகுப்போட்டியில் முதல் ஐவரில் ஒருவராகவும் வந்துள்ளார்.[4]
தொடர்ந்து சில விளம்பரப்படங்கள், கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ராணி, திருமணம் முடித்து தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் வசித்து வருகிறார், 2017 ஆம் ஆண்டில் , தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியப் பெண்களை ஊக்குவித்து கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்ட அழகுப்போட்டியில் மிஸஸ் இந்தியா தென் ஆப்ரிக்கா என்ற பட்டத்தையும் வென்றுள்ளார்.[5]
.