ராணி தாஜ் | |
---|---|
பிறப்பு | பர்மிங்காம் | 3 அக்டோபர் 1993
இசை வடிவங்கள் | பாங்கரா, ஹிப் ஹாப், ரிதம் அண்ட் புளூஸ், கிராமிய இசை |
தொழில்(கள்) | சர்வதேச தோல் இசைக்கலைஞர் |
இசைக்கருவி(கள்) | தோல், வியோலம் |
இசைத்துறையில் | 2009–தற்போது வரை |
இணையதளம் | ranitajinternational |
ராணி தாஜ் ( Rani Taj ) (பிறப்பு: அக்டோபர் 3, 1993) ஐக்கிய இராச்சியத்தின் பர்மிங்காம் நகரைச் சேர்ந்த ஒரு பிரித்தானிய பாக்கித்தான் தோல் கலைஞர் ஆவார். மிட்லாந்தில் ஏற்கனவே நன்கு அறியப்பட்டிருந்தாலும், 2010 ஆம் ஆண்டில் ரியானாவின் " ரூட் பாய் " பாடலுடன் தெருவில் நேரலையில் பாடிய ஒரு காணொளியில் தோன்றியபோது சர்வதேச அளவில் புகழ் பெற்றார். [1]
இரண்டு குழந்தைகளில் இளையவரான இவரது தாய் ஆரம்ப காலத்திலிருந்தே எப்போதும் 'ராணி' என்று அழைத்தார். இப்புனைப்பெயர் ஒட்டிக்கொண்டது மட்டுமல்ல, தானாகவே இவருடைய மேடைப் பெயராக மாறியது. [2]
பிபிசி ஏசியன் நெட்வொர்க்குக்கு அளித்த பேட்டியில், தனது பெற்றோர் இருவரும் பாக்கித்தானின் மிர்பூரில் பிறந்தவர்கள் என்று கூறியுள்ளார். மங்களா அணை கட்டும் போது, மற்ற பிரித்தானிய பாக்கித்தானியர்களைப் போலவே, இவரது குடும்பத்தினரும் தங்கள் வீட்டிலிருந்து இடம்பெயர்ந்தனர். அவர்களில் ஒருவர் ராணியின் தாய்வழி தாத்தா, 1960 களில் வேலை தேடுவதற்காக பர்மிங்காமுக்குச் சென்றார். தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பிறகு அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டார். ராணியின் தாயார் தனது சொந்த தாய் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் பிரிட்டனில் தந்தையுடன் சேர்ந்தபோது இவருக்கு நான்கு வயது. ராணி தாஜ் 1993 இல் பர்மிங்காமில் பிறந்தார்.
ராணி தனது ஒன்பது வயதிலிருந்தே தோள் வாசித்தாலும், ஆரம்பப் பள்ளியில் படிக்கும் போது தனது ஆறாவது வயதில் எடுத்த முதல் கருவி [[வியோலம்]. இவரது ஆரம்பப் பள்ளி வாழ்க்கையின் முடிவில் வைசாகி மேளாவில் கலந்து கொண்டார். அது முதல் இவருக்கு தானும் இக்கருவியைக் கற்றுக் கொள் முடிவு செய்தார்.
2010 கோடையில், இசுடாபோர்ட்சையரில் உள்ள ஸ்டோக் ஆன் ட்ரெண்டில் உள்ள ஒரு தெருவில் ராணி, முழு பஞ்சாபி உடை அணிந்து, ஒரு இசை நிகழ்ச்சியில் வெளிப்படையாக கலந்துகொண்டார்.[3] இந்த தன்னிச்சையான நிகழ்ச்சியை நண்பர் ஒருவர் பதிவு செய்து யூடியூப்பில் வைத்தார். உலகெங்கிலும் உள்ள மக்கள் இதனைப் பார்க்கத் தொடங்கினர், மேலும் ஒரு பெண் பாரம்பரியமாக ஆண்களுக்கான கருவியை வாசிப்பதைக் கண்டு அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.
2011 முதல் ராணி தாஜ் பாக்கித்தானின் சூபி தோல் கலைஞர்களான குங்கா மற்றும் மிட்டு சைன் ஆகியோருடன் நிறைய நேரம் செலவிட்டுள்ளார். இவர் 'கலந்தாரி' பாணியிலான தோல் இசையால் கவரப்படுவதோடு மட்டுமல்லாமல், பாக்கித்தான் முழுவதும் பல்வேறு மேளாக்கள் மற்றும் தர்பார்களில் அவர்களுடன் இணைந்து நிகழ்த்தியுள்ளார். [4] இலாகூரில் உள்ள பாபா ஷா ஜமாலின் தர்பார்கள், [5] லாகூரில் உள்ள ஷபீர் ஷா, [6] முர்ரியில் உள்ள பாபா லால் ஷா, [7] சிந்துவில் லால் ஷாபாஸ் கலந்தர், [8] குஜர் கானில் உள்ள ஹீரா லால் கலந்தர் மேளா [9] ,இலாகூரில் உள்ள தத்தா தர்பாரில் தத்தா மேளா போன்றவை இதில் அடங்கும். [10] [11]
பர்மிங்காமுக்கு அருகிலுள்ள இசுமெத்விக் நகரில் நடைபெற்ற ஐக்கிய இராச்சியத்தின் மிகப்பெரிய தோல் போட்டியின் நடுவர்களில் ஒருவராக இவர் அழைக்கப்பட்டார். இறுதிப் போட்டியில் ஒரே பெண் நடுவர் மட்டுமல்ல, அன்றைய மூத்த குழுவில் இருந்த இளைய நீதிபதியாகவும் இருந்தார். [12] [13]
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link)