ராதிகா ராவ் | |
---|---|
பணி | இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1995–தற்போது |
ராதிகா ராவ் (Radhika Rao) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் லக்கி: நோ ஒன் டைம் பார் லவ் (2005) படத்தை வினய் சப்ருவுடன் இணைந்து இயக்கி அதன் வழியாக இயக்குநராக அறிமுகமானார். இவரது அடுத்ததடுத்த படங்களாக ஐ லவ் என். ஒய் (2015), சனம் தேரி கசம் (2016), யாரியன் 2 (2023) ஆகிய படங்கள் வெளியாயின. இவர் தனது வணிக கூட்டாளியான வினய் சப்ருவுடன் இணைந்து ராவ் & சப்ரு என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.[1]
இசைக் காணொளிகளை வினய் சப்ருவுடன் இணைந்து இயக்கி பணிபுரிந்த பிறகு, ராதிகா 2005 ஆம் ஆண்டு சப்ருவுடன் இணைந்து லக்கி: நோ டைம் ஃபார் லவ் திரைப்படத்தை இணைந்து இயக்கி திரைப்பட இயக்குநராக அறிமுகமானார்.[2][3] இந்தப் படத்திற்கு பிபிசி யில் மனிஷ் கஜ்ஜார் செய்த விமர்சனத்தில் படத்தில் மந்தமான பகுதிகளும், சில மொழிபெயர்க்கப்படாத உருசிய உரையாடல்களும் உள்ளன. ஆனால் சல்மான் கானின் நடிப்பும் அட்னான் சாமியின் இசையும் படத்தை "பார்க்க வேண்டிய படம்" என்ற நிலைக்கு கொண்டு செல்கின்றன என்றார்.[4] இப்படத்திற்கான இந்தியா டுடேயின், விமர்சனத்தில் அனுபமா சோப்ரா இந்த படத்தை "பகட்டானது" என்று விவரிக்கிறார், "பனி நிறைந்த தரிசு நிலம், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் உருசியச் சமயச் சின்னங்களின் சோகமான அழகான காட்சிகள்" போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆனால் படத்தின் இரண்டாம் பகுதியைத் விரிவுபடுத்தி, மிதுன் சக்கரவர்த்தியின் விருந்தினர் தோற்றத்தை விவரித்து " எரிச்சலூட்டுகின்றனர்" என்றார்.[5]
இவர் அடுத்ததாக 2015 ஆம் ஆண்டு ஐ லவ் என். ஒய் என்ற திரைப்படத்தை சப்ருவுடன் இணைந்து இயக்கினார். இ. ஆ. செ. சே இன் டிராய் ரிபேரோவின் விமர்சனமானது படத்தின் தயாரிப்பு, படத்தொகுப்பு ஆகியவற்றைப் பாராட்டியது. மேலும் " காதல் கதையானது தர்க்கத்தை மீறியதாக உள்ளது. நீங்கள் கங்கனா ரனாத்தின் தீவிர ரசிகராக இருந்து பார்பத்தாக இருந்தால் மட்டுமே இந்தப் படத்தைப் பாருங்கள்" என்றார்.[6] பிலிம்பேரின் ரச்சித் குப்தா தன் விமர்சனத்தில் "இந்த படத்தின் சில பகுதிகள் நன்றாக உள்ளன" என்று எழுதினார், மேலும் இயக்குநரின் பணியை ஒரு "அமெச்சூர் எக்சிகியூட்" என்று விவரித்தார், ஆனால் "இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு ஒரு காரணமாக கங்கனா ரனாவத் இருக்கலாம்" என்றும் கூறினார். பிரேம் சோப்ராவின் நடிப்பையும் பாராட்டினார்.[7]
பின்னர் ராதிகா 2016 ஆம் ஆண்டு சனம் தேரி கசம் இப்படத்தை சப்ருவுடன் இணைந்து இயக்கினார். இந்தியன் எக்ஸ்பிரசின் சுப்ரா குப்தா எழுதிய விமர்சனத்தில் மவ்ரா ஹோகேன் நடிப்பை பாராட்டினார்.[8]
ரதிகா 2023 ஆம் ஆண்டு யாரியன் 2 படத்தை சப்ருவுடன் இணைந்து இயக்கினார். படத்தின் முன்னோட்டமானது யூடியூப்பில் 25 மில்லியன் பார்வைகளைத் தொட்டது. ரெடிப்.காம்பில் தீபா கஹ்லோட்டின் விமர்சனத்தில் இந்த படத்தை "இசைக் காணொளிகளின் தொகுப்பு என்று விவரிக்கிறது."
ராதிகாவும், சப்ருவும் இணைந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக நுசுரத் பதே அலி கான், லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே, அரிஜித் சிங், நேகா கக்கர் , ஜுபின் நியூட்ரியல் ஆகியோரின் 100 க்கும் மேற்பட்ட இசைக் காணொளிகளை இயக்கியுள்ளனர். இவர்கள் இசைக் காணொளிகளை பூஷன் குமாருக்கு சொந்தமான டி-சீரிஸ் நிறுவனத்துடன் இணைந்து இயக்கினர்.[9]