ராப்பரி மக்கள், இந்தியாவின் இராஜஸ்தான், குஜராத்தின் கட்ச் மாவட்டம் மற்றும் பாகிஸ்தானின் சிந்து மாகாணப் பகுதிகளில் வாழும் பழங்குடிகள் ஆவர்.[1][2]இவர்கள் தற்போது நாடோடி வாழ்க்கை வாழ்கின்றனர்.
அரேபியர்களின் வழித்தோன்றல்கள் எனக்கருதப்படும் ராப்பரி மக்கள், பலுசிஸ்தான் பகுதியில் புலம்பெயர்ந்தனர். இம்மக்களின் குலதெய்வம் ஹிங்குலாம் மாதா ஆவார். இராசபுத்திரர்கள் மற்றும் சரண் மக்கள் போன்று, போர் வீரர்களான ராப்பரி மக்கள் 12-14ம் நூற்றாண்டுகளில் மார்வார், சிந்து, கட்ச் பகுதிகளில் குடியேறினர்.[3]