ராமப்பிரியா கருநாடக இசை முறையில் 52வது மேளகர்த்தா அல்லது ஜனக இராகமாகும். இந்த மேளத்தில் பிறக்கும் ரமாமனோகரி அசம்பூர்ண மேளபத்ததியில் 52வது மேளமாக விளங்குகிறது.
ஆரோகணம்: | ஸ ரி1 க3 ம2 ப த2 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த2 ப ம2 க3 ரி1 ஸ |
வகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
---|---|---|---|
கிருதி | சந்தேகமுனு | தியாகராஜர் | ஆதி |
கிருதி | ஸ்மராம் யகம் | முத்துசாமி தீட்சிதர் | ரூபகம் |
கிருதி | தூக்கிய பாதத்தின் | முத்துத் தாண்டவர் | ரூபகம் |
கிருதி | சாமிசதா | கோடீஸ்வர ஐயர் | ஆதி |
கிருதி | எந்நாவில் சிறிதும் | பாபநாசம் சிவன் | ஆதி |
ராமப்பிரியாவின் ஜன்ய இராகங்கள் இவை.