ராம் | |
---|---|
இயக்கம் | அமீர் |
தயாரிப்பு | அமீர் |
கதை | அமீர் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | ஜீவா கஸாலா ரஹ்மான் முரளி சரண்யா சக்தி பிரதாப் பொத்தன் கஞ்சா கருப்பு |
விநியோகம் | Teamwork Production House |
வெளியீடு | 2005 |
மொழி | தமிழ் |
ராம் திரைப்படம் 2005ல் தமிழில் வெளிவந்த திரைப்படமாகும்.இதில் கதாநாயகன் ஜீவா மனநோயாளியாக நடித்துள்ளார்.
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
மகன் அவனது தாயைக் கொன்று விட்டதாக வரும் செய்தி கேட்டு அதிர்ந்து போகும் காவல்துறையினர் தமது தேடுதலின் பின்னர் உண்மையான கொலையாளி யார் என்பதனைக் கண்டுபிடிக்கின்றனர்.இதற்கிடையே கொலைகாரனாக கைது செய்யப்படும் காதலனைப் பார்த்து மனம் வருந்துகின்றார் ராமின் காதலி.ராமின் தாய் அவனின் காதலியின் சகோதரானால் கொல்லப்படும் செய்தி கேட்டறிகின்றான் ராம்.மேலும் அவன் கஞ்சா போன்ற போதைபொருட்களினை உபயோகிப்பதனைப் பார்த்த ராமின் ஆசிரியரான தாயாரை யாருக்கும் தெரியாதவண்ணம் கொலையும் செய்யப்படுகின்றார்.அதே சமயம் அங்கு வந்த ராம் இதனைப் பார்த்து திகைத்து நிற்கையில் தாயாரின் வயிற்றில் குத்தப்பட்டிருந்த கத்தியினை தன் கையிலெடுத்து பின் மயங்கி சரிகின்றார்.இதற்கிடையில் கூடும் காவல்துறையினர் ராம் மீது கொலைப்பழியினையும் சுமத்துவது பரிதாபம்.இறுதியில் கொலைகாரனாகக் கருதப்பட்ட ராம் செய்யாத தவற்றிற்காக சிறை சென்றதற்காகவும் தாயாரைக் கொலை செய்தவனைப் பழிவாங்குவதற்காகவும் மீண்டும் கொலை செய்யத்தூண்டப்படுகின்றான்.