இராம் துலாரி சின்கா | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (மாணிக்பூர்-சிற்றூர்), கோபால்கஞ்ச், பிகார் | 8 திசம்பர் 1922
இறப்பு | 31 ஆகத்து 1994 புது தில்லி | (அகவை 71)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | தாக்கூர் யுகல் கிசோர் சின்கா |
பிள்ளைகள் | மரு. மதுரேந்திர குமார் சிங் |
வாழிடம் | பட்னா |
இராம் துலாரி சின்கா (8 திசம்பர் 1922 – 31 ஆகத்து 1994) ஓர் தேசியவாதி, விடுதலைப் போராளி, இந்திய தேசிய காங்கிரசு சார்ந்த இந்திய மக்களவை உறுப்பினர் மற்றும் நடுவண் அமைச்சர். இந்திய கூட்டுறவு இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படுபவரும் முதல் மக்களவையில் உறுப்பினராக இருந்தவருமான தாக்கூர் யுகல் கிசோர் சின்காவின் மனைவியுமாவார். மக்களவை உறுப்பினராக இராம் துலாரி சின்கா முதல் மூன்று இந்தியப் பிரதமர்களுடன் (ஜவகர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி) பணியாற்றிய பெருமை உடையவர். இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அமைச்சரவைகளில் ஒன்றிய அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார். பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பீகார் மாநிலத்திலிருந்து முதுகலை பட்டம் பெற்ற முதல் பெண்மணி, ஆளுநராகப் பொறுப்பேற்ற முதல் பெண்மணி போன்ற பெருமைகளுக்கு உரியவர். 23 பிப்ரவரி 1988 முதல் 12 பிப்ரவரி 1990 வரை கேரள ஆளுநராக பொறுப்பாற்றி உள்ளார்.[1]
சட்டப் பேரவை தேர்தல் முடிவுகள்
ஆண்டு | தொகுதி | பதிவான வாக்குகள் | வாக்கு % | வெற்றியாளர் |
---|---|---|---|---|
1951 | 98. மேஜர்கஞ்ச் | 11520 | 51.73% | ஆம் |
1969 | 22. கோபால்கஞ்ச் | 15197 | 36.09% | ஆம் |
1972 | 22. கோபால்கஞ்ச் | 19749 | 42.36% | ஆம் |
மக்களவை தேர்தல் முடிவுகள்
ஆண்டு | தொகுதி | பதிவான வாக்குகள் | வாக்கு % | வெற்றியாளர் |
---|---|---|---|---|
1962 | 35. பட்னா | 101687 | 44.89% | ஆம் |
1980 | 12. சிவகர் | 174188 | 41.95% | ஆம் |
1984 | 12. சிவகர் | 254881 | 52.45% | ஆம் |
இவரது அரசியல் மரபை முன்னெடுத்து மகனும் முனைவருமான மதுரேந்திர குமார் சிங் 1989ஆம் ஆண்டு சிவகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரசு சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மதுரேந்திரா பீகார் மாநில தேசிய இந்திய மாணவர் ஒன்றியம் மற்றும் பீகார் பிரதேச இளைஞர் காங்கிரசு ஆகியவற்றின் துணைத் தலைவராக உள்ளார். முன்னதாக மாவட்ட காங்கிரசு கமிட்டி தலைவராக இருந்துள்ளார். கடந்த 16 ஆண்டுகளாக பீகார் பிரதேச காங்கிரசு கமிட்டியின் செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் பீகார் கூட்டுறவு இயக்கங்களில் முதன்மைப் பங்காற்றுவதுடன் மாநில கரும்பு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.