ராம்கர்கியா (Ramgarhia), இரும்புக் கருவிகள் உற்பத்தி செய்யும் கொல்லர் (லோகர்) சாதியினர் ஆவார். இச்சாதியினர் பஞ்சாப் பகுதிகளில் அதிகம் வாழ்கின்றனர். இச்சாதியினரின் உட்பிரிவினர் தர்கான் எனப்படும் தச்சர்கள் ஆவார்.[1][2]பஞ்சாபி மொழி பேசும் இம்மக்கள் பெரும்பாலாக சீக்கியம், இசுலாம் மற்றும் இந்து சமயங்களைப் பயில்கின்றனர். ராம்கர்கியா மக்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் அதிகம் வாழ்கின்றனர்.
பாரம்பரியமாக ராம்கர்கியா சாதியினர் தச்சுத் தொழில் செய்து வந்தனர். பின்னர் இரும்பு வேலை செய்யும் கொல்லர்கள் ராம்கர்கியா சாதியில் இணைக்கப்பட்டனர். துவக்கத்தில் சீக்கிய தச்சர்கள் மட்டுமே ராம்கர்கியா எனும் சாதிப்பெயர் இட்டுக்கொண்டனர். இந்து சமய தச்சர்கள் திமன் (Dhiman) எனும் சாதிப்பெயர் இட்டுக் கொண்டனர்.[3]
இருபதாம் நூற்றாண்டின் முதல் காலாண்டில் பிரித்தானிய ஆட்சியாளர்கள், ராம்கர்கியா மக்களின் கொல்லர் மற்றும் தச்சர்களை வடகிழக்கு இந்தியாவின் அசாம் உள்ளிட்ட பிற பகுதிகளின் இருப்புப்பாதை போன்ற கட்டுமானப் பணிகளுக்கு ஈடுபடுத்தினர்.[5]