ராம்குமார் கணேசன் (பிறப்பு 12 ஜனவரி 1955) என்பவர் ஓர் இந்திய திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இவர் பிரபல நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகனும், நடிகர் பிரபு, சாந்தி மற்றும் தேன்மொழி ஆகியோரின் மூத்த சகோதரரும் ஆவார். இவர் சிவாஜி புரொடக்சன்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.
சிவாஜி புரொடக்சன்ஸ் பல்வேறு திரைப்படங்களைத் தயாரித்துள்ளது. இவர் விவேகானந்தா கல்லூரியில் வணிக நிர்வாகத்தில் பட்டம் பெற்றார்.[1]
ராம்குமார் கண்ணம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு துஷ்யந்த், தர்ஷன் - ரிஷ்யன் என்ற இரட்டையர்கள் என மூன்று மகன்கள் உள்ளனர்.[2] மூவரும் தமிழ் திரையுலகில் நாயகர்களாக சில திரைப்படங்களில் நடித்துள்ளனர்.
ஆண்டு | தலைப்பு | மொழி | இயக்குநர் | குறிப்பு |
---|---|---|---|---|
1986 | அறுவடை நாள் (திரைப்படம்) | தமிழ் | ஜி. எம். குமார் | |
1987 | Anand | சி. வி. இராசேந்திரன் | ||
1988 | என் தமிழ் என் மக்கள் | சந்தான பாரதி | ||
1989 | வெற்றி விழா | பிரதாப் போத்தன் | ||
1990 | மை டியர் மார்த்தாண்டன் | |||
1991 | தாலாட்டு கேக்குதம்மா | ராஜ்கபூர் | ||
1992 | மன்னன் | பி. வாசு | ||
1993 | கலைஞன் (திரைப்படம்) | ஜி. பி. விஜய் | ||
1994 | ராஜ்குமாரன் | ஆர். வி. உதயகுமார் | ||
2005 | சந்திரமுகி (திரைப்படம்) | பி. வாசு | ||
2007 | டெல்லி ஹைட்ஸ் | இந்தி | ஆ னந்த் குமார் | |
2010 | அசல் (திரைப்படம்) | தமிழ் | சரண் |
ஆண்டு | தலைப்பு | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
1986 | அறுவடை நாள் (திரைப்படம்) | தந்தை வைசென்ட் பார்க்கர் சூசை | |
1990 | மை டியர் மார்த்தாண்டன் | ||
2005 | சந்திரமுகி (திரைப்படம்) | சிறப்புத் தோற்றம் | |
2015 | ஐ | இந்திரக்குமார் | |
2019 | எல்கேஜி | போஜப்பன் | |
2019 | பூமராங் | ஆகாஷ் | |
2022 | காரி | சேதுவின் பயிற்சியாளர் |