ராம்நகர், வாராணாசி மாவட்டம்

ராம்நகர்
நகரம்
ராம்நகர் is located in Varanasi district
ராம்நகர்
ராம்நகர்
இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பூர்வாஞ்சல் பிரதேசத்தில் உள்ள வாரணாசி மாவட்டத்தில் ராம்நகரத்தின் அமைவிடம்
ராம்நகர் is located in உத்தரப் பிரதேசம்
ராம்நகர்
ராம்நகர்
ராம்நகர் (உத்தரப் பிரதேசம்)
ஆள்கூறுகள்: 25°17′N 83°02′E / 25.28°N 83.03°E / 25.28; 83.03
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்வாரணாசி
ஏற்றம்
64 m (210 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்49,142
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுUP-65
இணையதளம்https://varanasi.nic.in/urban-local-bodies/

ராம்நகர் (Ramnagar) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பூர்வாஞ்சல் பிரதேசத்தில் உள்ள வாரணாசி மாவட்டம், வாரணாசி தாலுகாவில் அமைந்த நகராட்சி மன்றம் ஆகும். இது வாரணாசி நகரத்திற்கு தென்கிழக்கில் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரத்தில் காசி இராச்சியத்தின் ராம்நகர் கோட்டை அமைந்துள்ளது.[2]

வாரணாசி அருகில் அமைந்த ராம்நகர் கோட்டை

வரலாறு

[தொகு]

இராம்நகரத்தில் கங்கை ஆற்றின் கரையில் ராம்நகர் கோட்டையை மணற்கற்களால் 18-ஆம் நூற்றாண்டில் முகலாய கட்டிடக் கலை நயத்தில் நிறுவியவர் காசி இராச்சியத்தின் இறுதி மன்னர் விபுதி நாராயண சிங் ஆவார்.

இராமலீலை

[தொகு]

ஆண்டுதோறும் காசி மன்னர் பரம்பரையினர் இராம்நகரில் நடத்தும் இராமலீலையின் போது ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வர்.[3]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 3.624 எக்டேர் சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 7729 குடும்பங்களும், 25 வார்டுகளும் கொண்ட இராம்நகர் நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 49132 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 26071 மற்றும் 23061 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 885 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 6,090 ஆகும். சராசரி எழுத்தறிவு 79.92%, ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 5,340 மற்றும் 191 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 75.99%, இசுலாமியர்கள் 23.41%, சீக்கியர்கள் 0.43%, கிறித்துவர்கள் 0.1% மற்றும் பிறர் 0.06% ஆக உள்ளனர்.[4][5]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  2. Mitra, Swati (2002). Good Earth Varanasi city guide. Eicher Goodearth Limited. p. 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-87780-04-5.
  3. Banham, Martin (1995). The Cambridge Guide to Theatre (2nd ed.). Cambridge University Press. p. 1247. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-43437-9.
  4. Ramnagar City Population Census 2011
  5. Ramnagar City Population Census Data 2011


வெளி இணைப்புகள்

[தொகு]