வகை | துணை நிறுவனம் |
---|---|
நிறுவுகை | என்ஃபீல்ட் இந்தியாவாக 1955-ல் நிறுவப்பட்டது |
தலைமையகம் | சென்னை, இந்தியா |
தொழில்துறை | மோட்டார் வாகனம் |
உற்பத்திகள் | புல்லட் மோட்டார் சைக்கிள் |
தாய் நிறுவனம் | எய்சர் மோட்டார்ஸ் |
இணையத்தளம் | www.royalenfield.com |
ராயல் என்ஃபீல்ட் இந்தியாவில் சென்னையை தலைமையிடமாக கொண்டு மோட்டார் சைக்கிள்களை தயாரிக்கும் நிறுவனமாகும். முற்காலத்தில் பிரித்தானிய மோட்டார் சைக்கிள், ராயல் என்ஃபீல்ட் மற்றும் மெட்ராஸ் மோட்டார்ஸ் (தற்போது எய்சர் மோட்டாரின் துணை நிறுவனம்) இவை அனைத்தும் இந்தியாவின் மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர்களாக சிறந்து விளங்கின.[1] இதன் தனித்தன்மையான மோட்டார் சைக்கிள் ராயல் என்ஃபீல்ட் புல்லட், தனது தனிப்பட்ட அதிரவைக்கும் ஒலியுடன் கூடிய உயர்திறன் இயந்திரங்கள் இந்த நிறுவனத்தின் மதிப்புமிக்க மோட்டார் சைக்கிள் வகைகளில் குறிப்பிடத்தக்கது.[2]
ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள்கள் 1949 முதல் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது. 1949 ஆம் ஆண்டு கே. ஆர் சுந்தரம் ஐயர் என்பவர் ராயல் என்பீல்ட் உள்ளிட்ட பிரித்தானிய மோட்டார் சைக்கிள்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து விற்பதற்காக சென்னையில் மெட்ராஸ் மோட்டார்ஸ் என்ற பெயர் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். இந்திய அரசாங்கம், காவல் துறை மற்றும் இராணுவத்துறையின் ரோந்துப் பணிக்காக புல்லட்டை தேர்வு செய்தது. அதற்காக மெட்ராஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தை இந்திய அரசு அணுகியது. இந்திய அரசாங்கம் 800 350சிசி வகை புல்லட்டை வாங்க முன்வந்தது. இது மெட்ராஸ் மோட்டர்ஸ்சுக்கு மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. பிரிட்டனில் இருந்து மிகுந்த எண்ணிக்கையில் வாகனங்களை அனுப்புவதை விட மெட்ராஸ் மோட்டர்ஸ்சுடன் இணைந்து இந்தியாவிலேயே ஆலை தொடங்க ராயல் என்பீட் நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி 1955 ஆம் ஆண்டு சென்னை திருவெற்றியூரில் ராயல் என்பீட் நிறுவனத்தின் ஆலை துவக்கபட்டது. பல்வேறு காரணங்களினால் 1971 இல் பிரிட்டனில் இருந்த ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் தாய் நிறுவனம் மூடப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் நிறுவனம் இயங்கிவந்தது.
ஒரு கட்டத்தில் பொதுமக்கள் ராயல் என்பீட் வாகனத்தை வாங்குவது குறைந்து, நிறுவனம் கடும் இழப்பை சந்திக்கத் துவங்கியது. இந்நிலையில் 1994 இல் எய்சர் மோட்டார்ஸ் நிறுவனம் ராயல் என்பீட் நிறுவனத்தை வாங்கியது. நிறுவனத்தின் புதிய தலைமை நிறுவனத்தை மீண்டும் இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றியது.[3]
கடந்த சில வருடங்களாக பல்வேறு வகையான மோட்டார் சைக்கிள்கள் உலக அளவில் விற்கப்படுகின்றன.
ராயல் என்ஃபீல்ட் 1995-ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யபடுகின்றது. அமெரிக்காவில் கிடைக்கும் வகைகள்:
ராயல் என்ஃபீல்ட் தொழிற்சாலை சென்னையில் உள்ள திருவொற்றியூரில் அமைந்துள்ளது. இது உலகில் இன்றளவும் வழக்கத்தில் உள்ள மிக பழமையான மோட்டார் சைக்கிள் நிறுவனமாகும்.[1][2] 2013-ஆம் ஆண்டு மே மாதம் தனது புதிய தொழிற்சாலையை சென்னையை அடுத்த ஒரகடத்தில் நிறுவியது.[7] மூன்றாவது தொழிற்சாலையை சென்னை அருகில் உள்ள வல்லம் வடகல் பகுதியில் நிறுவியுள்ளது[8]