ரார்செசுடெசு தியூர்கவுபி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | ராகோபோரிடே
|
பேரினம்: | 'ரார்செசுடெசு
|
இனம்: | ரா. தியூர்கவுபி
|
இருசொற் பெயரீடு | |
ரா. தியூர்கவுபி சக்காரியா மற்றும் பலர், 2011 |
ரார்செசுடெசு தியூர்கவுபி (Raorchestes theuerkaufi) என்பது இந்தியாவில் கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் இடுக்கி மாவட்டம் மூணாருக்கு அருகிலுள்ள கடலார் தேயிலைத் தோட்டங்களில் காணப்படும் ரார்செசுடெசு பேரினத்தைச் சேர்ந்த தவளை சிற்றினமாகும்.[2] கேரளாவின் வயநாட்டில் உள்ள குருகுலத் தாவரவியல் சரணாலயத்தின் இயக்குநரும் தாவரவியலாளருமான வொல்ப்காங் தியூர்காப் என்பவரின் நினைவாக இந்தச் சிற்றினத்திற்குப் பெயரிடப்பட்டது.[1]
இந்தத் தவளை தேயிலை மற்றும் ஏலக்காய் பண்ணைகளுக்கு அருகில் இரண்டாம் நிலை காடுகளில் பாறைகள் மற்றும் இலைக் குப்பைகளில் தங்கியிருப்பதை அவதானிக்கலாம். இந்தத் தவளை சாலைகளை அடுத்துக் காணப்படும் செடிகளில் அமர்ந்திருப்பதையும் மக்கள் பார்த்துள்ளனர். கடல் மட்டத்திலிருந்து 1393 மற்றும் 2000 மீட்டர்களுக்கு இடையில் இவை காணப்படுகின்றன.[1]
தவளையின் வாழிட வரம்பில் பாதுகாக்கப்பட்ட பூங்கா ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது.[1]
ரார்செசுடெசு பேரினத்தில் உள்ள மற்ற தவளைகளைப் போலவே, இந்தத் தவளையும் தலைப்பிரட்டை நிலை இல்லாமல் நேரடி வளர்ச்சியின் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.[1]
பூச்சிக்கொல்லிகள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை இந்த தவளைக்கு அச்சுறுத்தலாக உள்ளது.[1]
பட்ராசோகைதிரியம் டெண்ட்ரோபேடிசு என்ற பூஞ்சை இந்தத் தவளையைப் பாதிக்கின்றது. இந்தப் பூஞ்சை கைட்ரிடியோமைகோசிசு எனும் பூஞ்சை நோயினை ஏற்படுத்துகிறது.[1]