ரால்ப் கானர் (Ralph Connor) ஓர் அமெரிக்க வேதியியலாளர் ஆவார். இவருடைய காலம் 1907 முதல் 1990 வரையுள்ள காலமாகும். கரிம வேதியியலில் வினையூக்கம், தொகுப்புவினை, வெடிபொருட்கள் மற்றும் வினை வழிமுறைகள் போன்ற கரிமவேதியியல் ஆராய்ச்சிகளுக்காக கானர் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறார். இரண்டாம் உலகப் போரில் தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி குழுவில் ஒரு பிரிவின் தலைவராகவும் கானர் பணியாற்றினார். வேதியியலில் சிறந்த பங்களிப்பிற்காக 1967 ஆம் ஆண்டில் அமெரிக்க வேதியியல் கழகத்தின் பிரைசுட்லி பதக்கம் கானருக்கு வழங்கப்பட்டது. சுதந்திரத்திற்கான சேவைக்கான கிரேட் பிரிட்டனில் வழங்கப்படும் கிங்சு பதக்கம், அமெரிக்க வேதியியல் நிறுவனம் வழங்கும் தங்கப் பதக்கம் உட்பட பல விருதுகளை கானர் பெற்றார்[1].