ராஷ்டிரிய தலித் உத்வேகத் தலம் மற்றும் பசுமை தோட்டம் | |
---|---|
வகை | பொது, நினைவகம் |
அமைவிடம் | நொய்டா, உத்திரப்பிரதேசம், இந்தியா |
ஆள்கூறு | 28°34′05″N 77°18′42″E / 28.568057°N 77.311784°E |
ராஷ்டிரிய தலித் உத்வேகத் தலம் மற்றும் பசுமை தோட்டம் (Rashtriya Dalit Prerna Sthal and Green Garden) என்பது தேசிய தலித் உத்வேகம் மற்றும் பசுமை தோட்டம் என்றழைக்கப்படுகின்ற, இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் அமைந்துள்ள ஒரு நினைவுச்சின்னம் ஆகும். [1] [2] [3] இது உத்தரபிரதேச முதலமைச்சர் மாயாவதியால் அமைக்கப்பட்டு 14 அக்டோபர் 2011 ஆம் நாளன்று திறந்து வைக்கப்பட்டது. [4] [5] [6]
ராஷ்டிரிய தலித் உத்வேகத் தலம் மற்றும் பசுமை தோட்டம் நொய்டாவில் தத்ரி முதன்மைச் சாலையில் அமைந்துள்ளது. வாரத்தின் அனைத்து நாட்களிலும் இந்த பசுமைத்தோட்டம் பார்வையாளர்களுக்காகத் திறந்துவைக்கப்பட்டிருக்கும். காலை 11.00 மணி வரை மாலை 5.00 மணி வரை பார்வையாளர்கள் இதனைப் பார்வையிடலாம்.
இந்தத் தோட்டம் ரூ. 685 கோடி செலவில் கட்டப்பட்டது ஆகும். [7] மாயாவதி அரசாங்கம் அனுமதிச்சீட்டு விற்பனை மூலமாக இச் செலவினை மீட்க எதிர்பார்த்திருந்தது. [8]
இந்த நினைவுச்சின்னத்தில் ராஷ்டிரிய தலித் ஸ்மாரக் ( தேசிய தலித் நினைவு ) என அழைக்கப்படும் ஒரு மினி-அருங்காட்சியகம் அமைந்துள்ளது. மேலும் யமுனா நதிக்கரையில் 82.5 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட பசுமைப் பகுதியின் விரிவாக்கம் இத்துடன் இணைந்துள்ளது. [4] ராஷ்டிரிய தலித் ஸ்மாரக் நாட்டின் 33 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் பரவி காணப்படுகிறது. இங்குமனிதநேயம், சமத்துவம் மற்றும் சமூக நீதி ஆகியவற்றிற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்ட பெருமக்களின் சிலைகள் காணப்படுகின்றன. அச்சிலைகளில் கௌதம புத்தர், சந்த் ஷிரோமணி ராய்தாஸ், சந்த் கபீர், ஜன் நாயக் பிர்சா முண்டா, ஈ. வே.பெரியார் ராமசாமி, நாராயண குரு, ஜான் நாயக் சாஹுஜி மகாராஜ், பீம்ராவ் அம்பேத்கர், ஜோதிபா பூலே மற்றும் கான்ஷி ராம் ஆகியவை அடங்கும். இந்த வளாகத்தில் பாரம்பரிய இந்திய வரவேற்புக்கான அடையாளமான இருபத்தி நான்கு பதினெட்டு-அடி உயர யானை சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. [9]
இந்த நினைவுச்சின்னம் சமூக சீர்திருத்தவாதிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னமாக அமைந்துள்ளது. மேலும் சமூக மாற்றத்திற்கான போராட்டங்கள் மேற்கொண்டவர்களின் ஈடு இணையற்ற போராட்டங்களை கௌரவிப்பதற்காக இது கட்டப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஓக்லா சரணாலயத்திற்கு அருகில் அமைந்திருப்பதால் "சுற்றுச்சூழல் நட்பாக இருக்காது" என்பதன் அடிப்படையில் அக்டோபர் 2009 இல், இந்திய உச்சநீதிமன்றம் மாயாவதி அரசாங்கத்திற்கு இதன் கட்டுமானப் பணிகளை நிறுத்தும்படி உத்தரவிட்டது. டிசம்பர் 2010 இல், நீதிமன்றம் அந்த ஆணையைத் திரும்ப் பெற்றது.திட்டம் தொடர்ந்து இயங்க அனுமதி தரப்பட்டது.
இந்த நினைவுச்சின்னத்தில் அவரது சொந்த சிலைகளும் இடம்பெற்றிருந்ததால், அரசியல் எதிரிகள் முதலமைச்சர் மாயாவதியை ஒரு "மெகாலோனியாக்" என்று குற்றம் சாட்டினர். மேலும் அவர் இந்திய தேசிய காங்கிரஸால் பெரிதும் விமர்சிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்களின் வரிப்பணத்தைத் தவறாக வீணடிக்கின்றார்கள் என்று குற்றம் சாட்டினர். [9] மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியானது இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்தது. தற்போதைய பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருடைய சிலையை அடுத்து அவரது சிலைகள் கட்டப்படவேண்டும் என்று கன்ஷி ராமின் விருப்பம் தெரிவித்ததன் அடிப்படையில் அவரது சிலைகள் அமைக்கப்பட்டதாகக் கூறினார். காங்கிரஸ் கட்சியானது "தலித் எதிர்ப்பு" என்றும் மாயாவதி குற்றம் சாட்டினார்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)