இயக்குபவர் | இந்திய விண்வெளி ஆய்வு மையம் |
---|---|
திட்ட வகை | Radar imaging |
ஏவப்பட்ட நாள் | 26 April 2012, 00:17 | UTC
ஏவிய விறிசு | PSLV-C19 |
ஏவு தளம் | சதீஸ் தவான் விண்வெளி மையம் FLP |
திட்டக் காலம் | 5 years (planned) |
தே.வி.அ.த.மை எண் | 2012-017A |
இணைய தளம் | ISRO - RISAT-1 |
நிறை | 1,858 kg (4,096 lb)[1] |
சுற்றுப்பாதை உறுப்புகள் | |
வான்வெளி கோளப்பாதை | Sun-synchronous |
சாய்வு | 97° |
Altitude | 536 km[1] |
சுற்றுப்பாதைகள்நாளொன்றுக்கு | 14 |
Instruments | |
முக்கிய கருவிகள் | சி வரிசை SAR |
Imaging resolution | 1m - 50m[2] |
ரிசாட்-1 (Radar Imaging Satellite 1 or RISAT-1)என்பது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட, மிக அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் ஆகும். இதன் எடை 1858 கிலோகிராம் ஆகும்.[3] 2012, ஏப்ரல் 26 ஆம் நாள் இந்திய விண்வெளி ஆய்வு மையம் தயாரித்த இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி.-சி19 ஏவுகணை மூலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அனைத்துப் பருவநிலைகளிலும் புவியைத் துல்லியமாகப் படம்பிடிக்கும்[4] இக்கோள் செலுத்தப்பட்ட 18 நிமிடங்களில் புவியிலிருந்து 480 கி. மீ உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டது. இது பி.எஸ்.எல்.வி.ஏவுகணை ( Polar Satellite Launch Vehicle) செலுத்திய 20 ஆவது வெற்றிகரமான செயற்கைக்கோளாகும்.[5]
இக்கோளின் மூலம் அனைத்து பருவ நிலைகளிலும், இரவு, பகல் அனைத்து நேரங்களிலும் புவியைக் கண்காணிக்க இயலும். இக்கோளில் உள்ள நுண்ணலை தொழில்நுட்பத்தால் மேகங்களை ஊடுருவவும், இரவில் படம் பிடிக்கவும் முடியும். இக்கோள் அனுப்பவிருக்கும் படங்களின் மூலம் இந்தியாவில் கோதுமை, அரிசி உற்பத்தி எந்த அளவிற்கு இருக்கும் என்பதைக் கணிக்க முடியும். பேரிடர் பாதிப்புகளையும், மழை, வெள்ளப் பாதிப்புகளையும் கண்டறிந்து நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள முடியும். மண் பரிசோதனை, கனிமவளங்கள் போன்றவற்றை ஆராயலாம். பவளப்பாறைகளைக் கண்டறிய இக்கோள் உதவும்.