ரிச்சர்ட் கியூ. ட்விஸ் (Richard Q. Twiss, 24 ஆகத்து 1920 – 20 மே 2005) இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு வானியலாளர் ஆவார். இவர் ராபர்ட் ஆன்பரி-பிரௌனுடன் இணைந்து "ஆன்பரி-பிரெளன் மற்றும் ட்விஸ் விளைவு” என்ற சோதனையில் ஈடுபட்டார். இதனால் 1954 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் குறிக்கீட்டுமானியின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. அவர்களது கண்டுபிடிப்பானது குவாண்டம் குறுக்கீடு குறித்து நிறுவப்பட்ட நம்பிக்கையை முரண்பாடாகக் காட்டியது.
ரிச்சர்ட் கியூ. ட்விஸ் இந்தியாவில் உள்ள சிம்லாவில் 1920ல் பிறந்தார். இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்தில் கணிதம் பயின்றார். அங்கு சிறப்பு பட்டத்தேர்வில் வெற்றி பெற்றார். அதன்பின்பு ராடார் மற்றும் அடிப்படை மின்னணுக் கோட்பாட்டினை நிறுவினார். இவருக்கு 1949 இல் அறிவியலுக்கான முனைவர் பட்டம் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தால் வழங்கப்பட்டது.
நரபிரை விண்மீன்சார் செறிவுக் குறிக்கீட்டுமானி அமைப்பதில் ட்விஸ் உதவினார். குறிக்கீட்டுமானி உதவியுடன் 1965 மற்றும் 1974ம் ஆண்டுக்கு இடையே எடுக்கப்பட்ட அளவீடுகள் சூரியனை விட விண்மீன்களே சூடான வெப்பநிலை அளவை கொண்டுள்ளதாக நிறுவப்பட்டது. இவ் அளவீடுகள் இன்னும் பயன்பாட்டில் உள்ளது.
இந்த செறிவுக் குறிக்கீட்டுமானியின் சைகை-இரைச்சல் விகிதம் மைக்கல்சன் விண்மீன்சார் குறுக்கீட்டுமானியுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவான விகிதத்தில் இருந்தது. இதனால் ட்விஸ் இங்கிலாந்தில் உள்ள டெடிங்டனில் அமைந்துள்ள தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடத்தில் மைக்கல்சன் ஸ்டெல்லர் குறிக்கீட்டுமானியைப் பயன்படுத்த முடிவு செய்தார். ஜான் டேவிஸ் இத் திட்டத்தில் சிறிதுகாலம் அவருடன் இணைந்து பணியாற்றினார்.
எடின்பரோவில் உள்ள ராயல் வான் ஆய்வகம் உரோம் நகரின் தெற்கே மான்டே போர்ட்சியோ கேட்டோனில் நிறுவப்பட்டபோது, ட்விஸ் தனது மைக்கல்சன் குறுக்கீட்டுமானியை அங்கு மாற்ற முடிவு செய்தார்.
அதே காலகட்டத்தில் அந்தோயி லேபீரியா என்பவர் ஸ்பெக்கில் குறிக்கீட்டுமானியைக் கண்டுபிடித்தார். இக் கண்டுபிடிப்பானது உலகெங்கிலும் குறிக்கீட்டுமானி பற்றிய ஆர்வத்தை ஊக்குவித்தது. இதனால் குறிக்கீட்டுமானி மலிவானதாகவும் ஸ்பெக்கில் குறிக்கீட்டுமானி உயர்ந்த செயல்திறனைக் கொண்டிருப்பதாகவும் ஜான் டேவிஸ், ஆன்பரி பிரெளன் மைக்கேல்சன் ஆகியோர் நம்பினர்.
1970களின் நடுப்பகுதியில் ட்விஸ் அறிவியலில் தீவிர ஈடுபாட்டிலிருந்து ஓய்வு பெற்றார். 2004 இல் அவர் ஆத்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார். 2005ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி அன்று அவர் மறைந்தார்.[1]
1968 ஆம் ஆண்டில் ராயல் வானியல் கழகத்தின் எடிங்டன் பதக்கம் ட்விஸ்க்கும் ஆன்பெரி-பிரௌனுக்கும் சேர்த்து வழங்கப்பட்டது.[2]
1982 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஏ. மைக்கல்சன் பதக்கம் பிராங்க்ளின் நிறுவனத்திலிருந்து ட்விஸ்க்கும் ஆன்பெரி-பிரௌனுக்கும் சேர்த்து வழங்கப்பட்டது.[2]
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)