ரிச்சர்ட் வர்மா | |
---|---|
இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவர் | |
பதவியில் சனவரி 16, 2015 – சனவரி 20, 2017 | |
குடியரசுத் தலைவர் | பாரக் ஒபாமா |
Deputy | மேரிக்கே எல். கார்ல்சன் |
முன்னையவர் | காட்லீன் ஸ்டீபன்ஸ் |
பின்னவர் | கேனீட் ஐ. ஜஸ்டர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நவம்பர் 27, 1968 எட்மன்டன், கனடா |
துணைவர் | மெலினேக் வர்மா |
ரிச்சர்ட் ராகுல் வர்மா (ஆங்கிலம்: Richard Verma) இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதராவார். இவர் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இப்பணியாற்றுகிறார்.[1] அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2009 ஆம் ஆண்டு அமெரிக்க அரசு சட்டமன்ற அலுவல்கள் துறை துணைச் செயலாளராக இவரை நியமித்தார்[2]. பஞ்சாப் மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்ட இவர்[3], இந்தியாவுக்கான அமெரிக்க தூதராகப் பணியாற்றும் முதல் அமெரிக்க வாழ் இந்தியர் ஆவார்.[4][5].
இவர் இந்திய வழித்தோன்றலில் பிறந்தவர் ஆவார். இவரது முன்னோர் பஞ்சாப் மாநிலத்தைச் சேரந்தவராவர். இவரது தந்தையார் பஞ்சாபைச் சேர்ந்தவர். பிரிவினைக்கு முந்தைய பாகிஸ்தானைச் சார்ந்த இவர் தாயார் பிரிவினைக்குப் பின்னர் இந்தியாவிற்கு குடிபெயர்ந்தார்[6]. 1960 களில் இவரது குடும்பம் அமெரிக்காவில் குடியேறியது. இவரது மனைவி பிங்கி வர்மா ஆவார்.
லேஹை பல்கலைக்கழகத்தில் இருந்து பி. எஸ். பட்டமும், அமெரிக்கன் பல்கலைக்கழகத்தில் இருந்து ஜே. டி. பட்டமும், ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் இருந்து எல்.எல்.எம். பட்டமும் வர்மா பெற்றுள்ளார்.
இவர் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் ஆவார். 1994ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டு வரை, அமெரிக்க விமானப் படையில் பணியாற்றியவர். அமெரிக்க வெளியுறவுத் துறையில் சட்ட விவகாரங்களுக்கான உதவி அமைச்சராக 2009ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார் [7].