ரிமி ப. சாட்டர்ஜி Rimi B. Chatterjee | |
---|---|
தொழில் | பேராசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் |
தேசியம் | இந்தியர் |
கல்வி | ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் (முனைவர்) |
காலம் | தற்காலம், வரலாறு |
வகை | புனைக்கதை, அறிவியல் புனைவு, வரைகதை comics |
ரிமி பர்னாலி சாட்டர்ஜி (Rimi B. Chatterjee) என்பவர் இந்திய எழுத்தாளர் மற்றும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியர் ஆவார்.
சாட்டர்ஜி ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஒரு எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆங்கிலப் பேராசிரியர் ஆவார். இவர் 1997-ல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்ட ஆய்வினை முடித்தார்.[1] பின்னர் சாட்டர்ஜி 2004முதல்[2] ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கத் தொடங்கினார். இவர் பேராசிரியராக இருந்த காலத்தில் பேராசிரியர் அபிஜித் குப்தா இலக்கிய ஆய்வின் ஒரு பகுதியாக வரைகலைப் படிப்பை உள்ளடக்கிய முதல் திட்டம் ஒன்றை உருவாக்கினர்.[3] ஆங்கிலத் துறையால் தயாரிக்கப்பட்ட வரைகலை இதழான ட்ரிகாங்சூவுக்கும் சாட்டர்ஜி பங்களித்தார்.[3]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)