ரீட்டா தேவி

ரீட்டா தேவி
இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா தேவிசிங் பாட்டீல் பத்மசிறீ விருதை ரீட்டா தேவிக்கு வழங்கினார்
பிறப்பு11 October 1942 (1942-10-11) (வயது 82)
அசாம், இந்தியா
பணிசமூக சேவகர்
பெற்றோர்திரேந்திர ராய் சௌத்ரி
கமலா
வாழ்க்கைத்
துணை
மன்வேந்திர கிஷோர் தேவ் பர்மன்
விருதுகள்பத்மசிறீ
வலைத்தளம்
Official web site

ரீட்டா தேவி வர்மா (Reeta Devi) ஓர் இந்தியச் சமூக சேவகர் மற்றும் தில்லியைத் தளமாகக் கொண்ட அரசு சாரா நிறுவனமான இலா அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார்.[1] இவரது சேவைக்காக 2012ஆம் ஆண்டில், நான்காவது உயரிய இந்தியக் குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கி இந்திய அரசால் கௌரவிக்கப்பட்டார்.[2]

வாழ்க்கை

[தொகு]

  ரீட்டா தேவி, 11 அக்டோபர் 1942-இல் பிறந்தார்.[3] அசாமில் உள்ள பணக்கார ஜமீந்தார் குடும்பமும் தேயிலை தரகருமான தீரேந்திர ராய் சவுத்ரி மற்றும் முனைவர் கமலா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தாயார் தாவரவியல் குவகாத்தி காட்டன் கல்லூரியின் முதல் பெண் விரிவுரையாளர் ஆவார்.[4] பட்டம் பெற்ற பிறகு, தேவி பிரித்தானிய ஏர்வேஸ் வானூர்தி நிறுவனத்தில் விமானப் பணிப் பெண்ணாகச் சேர்ந்தார். இதனை இவரது தந்தை விரும்பவில்லை. ஆனால் பின்னர், ஏர் இந்தியா நிறுவனத்தில் பிரித்தானிய நிறுவனம் தனது தொலைதூர பிராந்தியங்களுக்குப் பறக்க வாய்ப்பளிக்கவில்லை என்று அவர் உணர்ந்தபோது சேர்ந்தார்.[4] 1964ஆம் ஆண்டு நவம்பர் மாதம், திரிபுராவின் அரச குடும்பத்தைச் சேர்ந்த மன்வேந்திரா கிஷோர் தேவ் பர்மன் (பீம்) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் காயத்ரி தேவி, ஜெய்ப்பூரின் மூன்றாவது மகாராணியின் மருமகள் ஆனார்.[4]

தீவிர குதிரைப் பந்தய ரசிகரும், கொல்கத்தா குதிரைப் பந்தையத்திடலில் நடந்த வெள்ளிக்கிழமை பந்தயங்களில் வழக்கமாகக் கலந்துகொண்ட தேவி, தனது வெற்றி பரிசுகளில் ஒரு பகுதியை அன்னை தெரசா நடத்திய பிறரன்பின் பணியாளர்கள் சபைக்கு வழங்கினார்.[4] புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர்களான டேவிட் பெய்லி மற்றும் அந்தோணி ஸ்னோடன் படங்களை நிறுவினார். 1971ஆம் ஆண்டில் தன்னைப் போலவே ஒரு சிறப்புத் தோற்றத்தில் சத்யஜித் ரே திரைப்படமான சீமபத்தாவில் நடித்தார்.[4]

தேவியின் கணவர் மன்வேந்திர கிஷோர் தேவ் பர்மன், தில்லியின் கான் சந்தைப் பகுதியில் தெருநாய்களுக்குத் தினமும் இரண்டு முறை உணவு வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த இணையருக்குக் குழந்தைகள் இல்லை.[3][4] இவர் தில்லியில் வசித்தார்.[5] இலா அறக்கட்டளையின் தலைவராகச் சேவையாற்றி வருகின்றார்.[3]

இலா அறக்கட்டளை மற்றும் சமூகப் பணி

[தொகு]

ரீத்தா தேவி அன்னை தெரசாவுடன் பதினாறு வயதிலிருந்து தொடர்புடையவர். பாக்கியம் கன்னியாசுதிரியாக கொல்கத்தா தேவி தனது சமூக வாழ்க்கையில் ஊக்கமளித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 1971ஆம் ஆண்டுக்குப் பின்னர் அகதிகள் முகாம்களுக்குத் தேவி சென்று வங்கதேச விடுதலைப் போரில், பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொண்டார்.[4] இவள் அடிக்கடி அன்னை தெரசாவால் அமைக்கப்பட்ட ஒரு நல்வாழ்வு மையமான நிர்மல் இரிடே சென்று, நோய்வாய்ப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் மற்றும் இறப்பவர்களுக்காக பணியாற்றினார். இங்கு இவர் மாடிகளைச் சுத்தம் செய்து அங்கு உள்ளவர்களுடன் கழிப்பார்.[4]

ரீட்டா தேவி தனது சமூக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக, 1994ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி, இலா தேவியின் பெயரில்[6] அரசு சாரா அமைப்பான இலா அறக்கட்டளையை நிறுவினார். அடுத்த ஆண்டு, குவாகாத்தியில் மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களுடன் முதல் அவசரக்கால ஊர்தி சேவையை இவர் தொடங்கினார். மேலும் 1996இல், பிறரன்பின் பணியாளர்கள் சபையின் நல்வாழ்வுச் சேவையில் உதவினார். ஒரு வருடம் கழித்து, 1997ல், அசாமில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்தில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்காக மற்றொரு மருத்துவமனையை நிறுவினார்.

ரீட்டா தேவி தனது செயல்பாட்டைத் தில்லிக்குக் குடிபெயர்ந்து தலைநகரில் முதல் நடமாடும் மருத்துவமனையினை 2003-இல் தொடங்கினார்.[6] இதே ஆண்டு, இவரது அறக்கட்டளையானது எச்.ஐ.வி மற்றும் காசநோயாளிகளுக்காக குவகாத்தியில் உள்ள பெட்குச்சியில் ஒரு நல்வாழ்வு மையத்தினைக் கட்டியது. கட்டுமானத்திற்கான பணத்தைத் திரட்டுவதற்காகத் தேவி தனது வாகனத்தை விற்றதாகக் கூறப்படுகிறது.[4] இருபது படுக்கைகள் கொண்ட இந்த மையம், கத்தோலிக்க சமூகத்தின் பாத்திமா சகோதரிகளால் நடத்தப்படும் தொண்டு நிறுவனமான சிநேகாலயாவிற்கு[7] நன்கொடையாக வழங்கப்பட்டது. இப்போது இது இலா சிநேகாலயா என்று அழைக்கப்படுகிறது.[8]

2007ஆம் ஆண்டு எல்டன் ஜான் எய்ட்ஸ் அறக்கட்டளையின் உதவியுடன் தில்லியில் இரண்டாவது பிரிவு தொடங்கப்பட்டது.[3] இதைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டில் மூன்றாவது அலகு. இலா அறக்கட்டளையின் நடமாடும் மருத்துவமனையினை 12 மருத்துவர்கள், 4 மருந்தாளுநர்கள், 6 உபபணியாளர்கள், 3 ஓட்டுநர்கள் மற்றும் 2 நிர்வாகப் பணியாளர்களுடன் தொடங்கியது.[6] ரீட்டா தேவி, மிகவும் பயிற்சி பெற்ற சில மருத்துவ மருத்துவர்களை இந்த சேவையில் இணைத்து பணியாற்றுவதில் வெற்றி பெற்றார்.[9] இந்த நடமாடும் மருத்துவச் சேவை அமைப்புகள் வாரத்தில் ஆறு நாட்கள் தில்லியின் பல்வேறு இடங்களில் ஏழைகளுக்கு மருத்துவ சேவையை வழங்குகின்றன. இதனுடன் நோய் கண்டறிதல், பரிசோதனைகள், சிகிச்சைகள் மற்றும் மருந்துகளை இலவசமாக வழங்குகிறது.[6] அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட மின்னணு மருத்துவ பதிவு அமைப்புடன் சேவை அலகுகள் இணைக்கப்பட்டுள்ளது.[6]

இந்த அறக்கட்டளையானது, புது தில்லியில் உள்ள சுஜன் சிங் பூங்காவில் உள்ள அலுவலகத்திலிருந்து செயல்படுகிறது.[10] மற்றும் தொண்டு நிகழ்வுகள்[3] மூலம் தேவையான நிதியைத் திரட்டுகிறது.[11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Principles of Perinatal and Pediatric HIV/AIDS. JP Medical Ltd.
  2. "Padma Shri" (PDF). Padma Shri. 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Kushwant Singh (October 2010). "My fair ladies: the costume designer and the altruist". The Hindustan Times. http://www.hindustantimes.com/comment/columns/my-fair-ladies-the-costume-designer-and-the-altruist/article1-617011.aspx. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 4.8 "TOI". TOI. 28 January 2001. பார்க்கப்பட்ட நாள் 5 December 2014.
  5. "New York Times". 15 September 1999. பார்க்கப்பட்ட நாள் 6 December 2014.
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 "Medicos India". Medicos India. 22 May 2014. பார்க்கப்பட்ட நாள் 5 December 2014.
  7. "Snehalaya". Snehalaya. 2014. பார்க்கப்பட்ட நாள் 5 December 2014.
  8. "Church News Site". Church News Site. 2014. பார்க்கப்பட்ட நாள் 5 December 2014.
  9. Khushwant Singh (9 October 2010). "Healers and Dealers". Column. Deccan Herald. http://www.deccanherald.com/content/103405/content/217834/F. 
  10. "Location of Ila Trust". Star Local. 2014. பார்க்கப்பட்ட நாள் 5 December 2014.
  11. "India Info Online". India Info Online. 23 January 2013. பார்க்கப்பட்ட நாள் 5 December 2014.

மேலும் படிக்க

[தொகு]