ரீட்டா குத்துர்னி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | (ஹாமில்டன், 1822)
|
இனம்: | ரீ. மேக்ராகாந்தசு
|
இருசொற் பெயரீடு | |
ரீட்டா மேக்ராகாந்தசு எச். எச். என்ஜி, 2004 |
ரீட்டா மேக்ராகாந்தசு (Rita macracanthus) என்பது சிந்து ஆற்று வடிகால் பகுதியில் காணப்படும் பக்ரிடே குடும்ப கெளிறு மீன் சிற்றினமாகும். இது ஆப்கானித்தான், இந்தியா மற்றும் பாக்கித்தானில் காணப்படுவது பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்காளதேசத்தின்உள்ளூர் பெயரில் ரீட்டா எனும் பேரினப் பெயரும் மேக்ராகாந்தசு என்பது கிரேக்க மொழிச் சொல்லான மோக்ராசு (makros) என்பதிலிருந்து தோன்றியது. இதன் பொருளானது நீளம் என்பதாகும். இதனுடன் முள் எனும் பொருள்படும் அகந்தா இணைந்து சிற்றினப் பெயர் தோன்றியது. இந்த சிற்றினத்தின் நீண்ட முதுகு மற்றும் முன்தோல் முதுகெலும்புகளை இச்சொல் குறிக்கும். இம்மீனின் உடல் நீளம் 26.3 செமீ வரை இருக்கும்.
ரீ. மேக்ராகாந்தசு முதுகெலும்பற்ற விலங்குகளையும் சிறிய மீன்களையும் உணவாகக் கொள்கிறது.[2] இதன் இனப்பெருக்கக் காலம் சூன் முதல் சூலை இறுதி வரை நீடிக்கும். இனப்பெருக்கக் காலத்தில் மீன்கள் குளங்களின் குளிர்ந்த நீர்நிலைகளுக்கு இடம்பெயர்கின்றன.[2]