ருசிர் சர்மா (Ruchir Sharma) என்பவர் மோர்கன் ஸ்டான்லி என்ற முதலீட்டுக் குழுமத்தின் அதிகாரியாக இருப்பவர். எமரஜிங் மார்கெட் அன்ட் குளோபல் ஸ்ட்ரேட்டஜிஸ்ட் என்னும் பிரிவில் தலைவராக இருக்கிறார்.[1] உலகம் முழுவதும் பயணம் செய்து பல நாடுகளின் முதலீட்டுக்கான வாய்ப்புகளை அறிந்து கொள்வது இவரது முகாமையான பணி ஆகும். உலகத்தில் உள்ள பல பெருங்குழுமங்களின் தலைவர்கள், முதலீட்டாளர்கள், தொழில் அதிபர்கள் ஆகியோரைச் சந்தித்துத் தமது குழுமத்திற்குச் சேவை செய்து வருகிறார்.
அமெரிக்காவில் நியூயார்க்கில் வாழ்ந்து வரும் ருசிர் சர்மா வாசிங்டன் போஸ்ட், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், நியூ யார்க்கு டைம்ஸ் போன்ற செய்தித் தாள்களில் உலகப் பொருளியல் மற்றும் நிதியம் தொடர்பான சிக்கல்களை ஆராய்ந்து எழுதி வருகிறார்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)