தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ருதுராஜ் தச்ரத் கெய்க்வாட் | ||||||||||||||||||||||||||||
பிறப்பு | 31 சனவரி 1997 பிம்பிரி-சிஞ்ச்வடு, புனே, மகாராஷ்டிரா, இந்தியா | ||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | ||||||||||||||||||||||||||||
பங்கு | துவக்க ஆட்டக்காரர் | ||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||||||||||||||||||||||
2016-தற்போதுவரை | மகாராஷ்டிரா துடுப்பாட்ட அணி | ||||||||||||||||||||||||||||
2019-தற்போதுவரை | சென்னை சூப்பர் கிங்ஸ் | ||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 29 ஏப்ரல் 2021 |
ருதுராஜ் கெய்க்வாட் (பிறப்பு 31 சனவரி 1997) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர்.[1] 6 அக்டோபர் 2016 அன்று 2016–17 ரஞ்சி டிராபியில் மகாராஷ்டிரா அணிக்காக முதல் தரப் போட்டிகளில் அறிமுகமானார். [2] பிப்ரவரி 2, 2017 அன்று 2016–17 இன்டர் ஸ்டேட் இருபது-20 போட்டியில் மகாராஷ்டிரா அணிக்காக இருபது20 போட்டிகளில் அறிமுகமானார். [3] பிப்ரவரி 25, 2017 அன்று 2016–17 விஜய் ஹசாரே டிராபியில் மகாராஷ்டிரா அணிக்காக பட்டியல் அ போட்டிகளில் அறிமுகமானார். [4]
2018 டிசம்பரில், 2018 ஏ.சி.சி வளர்ந்து வரும் அணிகள் ஆசியா கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றார். [5]
இவர் டிசம்பர் 2018 இல், 2019 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். [6] [7] ஜூன் 2019 இல், அவர் இந்திய ஏ அணியில் இலங்கைக்கு எதிராக 187 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.[8] ஆகஸ்ட் 2019 இல், அவர் 2019–20 துலீப் டிராபிக்கான இந்தியா ப்ளூ அணியின் அணியில் இடம் பெற்றார். அக்டோபர் 2019 இல், 2019–20 தியோதர் டிராபிக்கான இந்தியா பி அணியில் இடம் பெற்றார். [9] தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக உள்ளார்.[10]