![]() | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
ருத்தேனியம் டெட்ராபுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
71500-16-8 | |
ChemSpider | 146211 |
EC number | 238-533-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 167109 |
| |
பண்புகள் | |
F4Ru | |
வாய்ப்பாட்டு எடை | 177.06 g·mol−1 |
தோற்றம் | இளஞ்சிவப்பு நிறப் படிகங்கள் |
நீருடன் வினைபுரியும் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஒற்றைச் சரிவச்சு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ருத்தேனியம்(IV) புளோரைடு (Ruthenium(IV) fluoride) என்பது RuF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். ருத்தேனியமும் புளோரினும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1][2]
ருத்தேனியம்(IV) புளோரைடு சேர்மம் முதன்முதலில் 1963 ஆம் ஆண்டில் ஆலோவே மற்றும் பீகாக்கு ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. அயோடின் பெண்டாபுளோரைடை கரைப்பானாகப் பயன்படுத்தி, அயோடினுடன் ருத்தேனியம் பெண்டாபுளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் மஞ்சள் நிறத்தில் திண்மமாக இது உருவானது.
இந்த வழியில் உற்பத்தி செய்யப்படும் ருத்தேனியம்(IV) புளோரைடு தூய்மையற்றது என்று அடுத்தடுத்த ஆய்வுகள் சுட்டிக்காட்டின. நீரற்ற ஐதரோபுளோரிக் அமிலத்தில் KRuF6 சேர்மத்துடன் ஆர்சனிக் ஐம்புளோரைடைச் சேர்த்து 20 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்வதன் மூலம் 1992 ஆம் ஆண்டில் முதன்முறையாக நீர் மற்றும் ஆக்சிசனை கண்டிப்பாக விலக்கி தூய, இளஞ்சிவப்பு நிறத்தில் ருத்தேனியம்(IV) புளோரைடு தனிமைப்படுத்தப்பட்டது. இந்த தொகுப்பு இலூயிசு அமிலம் AsF சேர்மத்தின் மிகவும் வலுவான புளோரைடு அயனியை ஏற்றுக்கொள்ளும் திறன்களைப் பயன்படுத்துகிறது.[3][4]
திண்ம நிலையில் உள்ள RuF4 ஒரு பல்லுருவ சேர்மமாகும். இது RuF6 எண்முகத்தைக் கொண்ட நெளி அடுக்குகளின் முப்பரிமாண அமைப்பு பகிரப்பட்ட புளோரின் அணுக்களால் இணைக்கப்பட்டுள்ளது. இதன் படிக அமைப்பு வனேடியம் டெட்ராபுளோரைடைப் போன்றதாகும். P21/n என்ற இடக்குழுவில் a = 560.7 பைக்கோமீட்டர் , b = 494.6 பைக்கோமீட்டர், மற்றும் c =514.3 பைக்கோமீட்டர், β = 121.27° என்ற அலகுசெல் அளவுருக்களுடன் ஒற்றைச் சரிவச்சுப் படிக அமைப்பில் ருத்தேனியம்(IV) புளோரைடு படிகமாகிறது.[5]
ருத்தேனியம்(IV) புளோரைடு மிகவும் வினைத்திறன் கொண்ட சேர்மமாகும். ஈரப்பதத்துடன் தொடர்பு கொண்டவுடன் உடனடியாக கருமையாகிறது. மேலும், தண்ணீருடன் தீவிரமாக வினைபுரிந்து ருத்தேனியம் டை ஆக்சைடைக் கொடுக்கிறது. கண்ணாடி கொள்கலன்களில் ருத்தேனியம்(IV) புளோரைடை சேமிக்க முடியும். இருப்பினும், மாதிரியை 280 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடாக்கினால் தாக்கப்படும்.