ருத்தேனியம் போரைடுகள் (Ruthenium borides) என்பவை ருத்தேனியம் மற்றும் போரான் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் சேர்மங்கள் ஆகும். அதிக கடினத்தன்மை இத்தகைய சேர்மங்களின் சிறப்புப் பண்பாகும். கடினத்தன்மையை அளவிட பயன்படுத்தப்படும் விக்கர்சு கடினத்தன்மை சோதனையில், RuB2 மற்றும் Ru2B3 நிலை சேர்மங்கள் பகுதிப் பொருள்களாக உள்ள மெல்லிய படச்சுருள்களில் ருத்தேனியம் போரைடுகளின் கடினத்தன்மை மதிப்பு HV = 50 கிகா பாசுக்கல் ஆகும் [1]. இந்த மதிப்பு மொத்தமாக உள்ள RuB2 அல்லது Ru2B3 சேர்மங்களைக் காட்டிலும் கணிசமான அளவு அதிகமாக உள்ளது. ஆனால் அதை தனித்தனியாக உறுதிப்படுத்த வேண்டும், மீக்கடின பொருட்கள் மீதான அளவீடுகள் உள்ளார்ந்த அளவில் கடினமானவையாகும்.
உதாரணமாக தொடர்புடைய பொருளான இரேனியம் டைபோரைடு சேர்மத்தின் தீவிர கடினத்தன்மை குறித்த ஆரம்ப அறிக்கையானது மிகவும் நம்பிக்கையுடன் இருக்கலாம் எனக் கருதப்படுவது கவனிக்கத்தக்கது [2] was probably too optimistic.[3].
இரேனியம் டைபோரைடின் கட்டமைப்பைப் போன்று ருத்தேனியம் டைபோரைடும் அறுகோணக் கட்டமைப்பில் இருக்கும் எனக் கருதப்பட்டது [4]. ஆனால் பின்னர் இது செஞ்சாய்சதுரக் கட்டமைப்பில் உள்ளதாக உறுதி செய்யப்பட்டது [5].