ரூகி 2010ஆம் ஆண்டு மிஸ் இந்தியா உலகளவில் இறுதிப் போட்டியாளராக இருந்தார். இவர் லேக்மி பேசன் வீக், இந்தியா பேசன் வீக், ராக்கி ஸ்டார், ஜெ. ஜெ. வாலையா, விக்ரம் பாதணிசு, ரீட்டு குமார் மற்றும் ரீட்டு பெரி போன்ற நிறுவனங்களுக்கு வடிவழகராக பணியாற்றியுள்ளார்.[3]
ரூகி சதுர்வேதி 2012ஆம் ஆண்டு இசை சார்ந்த பரபரப்பூட்டும் திரைப்படமானஆலாப் மூலம் அறிமுகமானார். இதில் இவர் கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.[4]
2017ஆம் ஆண்டில் சதுர்வேதி பிரபலமடைந்தார். ரூகி ஏக்தா கபூரின் நாடகத் தொடரான குண்டலி பாக்யாவில்ஷெர்லின் ரிஷப் லூத்ராவாக நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டு நடித்தார்.[5] மற்றொரு பிரபலமான நாடகத் தொடரான குங்குமம் பாக்யாவிலும் ரூகி நடித்துள்ளார்.[6]
ரூகி சதுர்வேதி இராசத்தான்செய்ப்பூரில் பிறந்தார்.[7]மும்பையில் உள்ள தெய்வக் குழந்தைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் பவன் கல்லூரியில் சேர்ந்து வரலாற்றில் இளங்கலைப் படிப்பை முடித்தார்.[8]
2 திசம்பர் 2019 அன்று, சதுர்வேதி தனது நீண்ட நாள் காதலரான சிவேந்திர சைனியோலை தனது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்ட ஒரு தனிப்பட்ட விழாவில் திருமணம் செய்து கொண்டார்.[9][10]