ரூபா பஜ்வா | |
---|---|
பிறப்பு | 1976 (அகவை 48–49) அமிர்தசரசு, பஞ்சாப், இந்தியா |
மொழி | ஆங்கிலம் |
குறிப்பிடத்தக்க விருதுகள் |
|
ரூபா பஜ்வா (Rupa Bajwa பிறப்பு 1976) ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார், இவர் பஞ்சாபின் அமிருதசரசில் வசித்து வருகிறார். இவர் காமன்வெல்த் விருது, கிரின்சேன் கேவர் பரிசு மற்றும் இந்தியாவின் சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
2004 இல், தனது முதல் புதினமான தெ சேரி சாப்பினை வெளியிட்டார், இது அவரது சொந்த ஊரையும் இந்தியாவின் வர்க்க இயக்கவியலையும் பற்றி விவரிக்கிறது. [1] இந்த புதினத்திற்காக விமர்சகர்கள் இவரை இந்தியாவின் புதிய இலக்கிய கண்டுபிடிப்பு என்று அழைத்தனர். சூன் 2005 இல் இந்தப் புதினம் சிறந்த புதினத்திற்கான 24ஆவது கிரின்சேன் கேவர் பரிசினையும், காமன்வெல்த் பரிசினையும் 2006 ஆம் ஆண்டில் ஆங்கில சாகித்திய அகாதமி விருதினையும் வென்றது. இந்தப் புதினம் பிரஞ்சு ( Le vendeur de saris ), டச்சு ( D Sariwinkel ) மற்றும் செர்பியன் ( Prodavnica sarija ) உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ரூபா பஜ்வாவின் இரண்டாவது புதினமான டெல் மீ எ ஸ்டோரி ஏப்ரல் 2012 இல் வெளியிடப்பட்டது. இது தீவிர எதிர்வினைகளை சந்தித்தது. இது சில தரப்பிலிருந்து விமர்சன ரீதியில் பாராட்டுகளைப் பெற்ற, அதே நேரத்தில் புது டெல்லியில் உள்ள இலக்கிய உலகில் சர்ச்சையை உருவாக்கியது, ஏனெனில் இந்த புதினத்தின் ஒரு பகுதி இவர்களையே எதிர்மறையாக சித்தரித்து இருந்தது. [2]
தற்போது, ரூபா பஜ்வா தனது மூன்றாவது புதினத்தை உருவாக்கி வருகிறார். [3] [4] [5]
இவர் ஒரு சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், பஜ்வா ஓர் இந்திய நாளிதழான த டெயிலி டெலிகிராப்பில் சர்ச்சைக்குரிய "டார்க் திங்ஸ் டூ ஹேப்பன் இன் குருத்துவாரா" என்பதனை எழுதினார்.[6]
தி டெலிகிராப், தி ட்ரிப்யூன், டைம் அவுட் மற்றும் இந்தியா டுடே ஆகியவற்றில் புத்தக மதிப்புரைகள் மற்றும் கட்டுரைகளை இவர் எழுதுகிறார்.