ரெட்டி | |
---|---|
வகைப்பாடு | முன்னேறிய வகுப்பினர் |
மதங்கள் | இந்து சமயம் |
மொழிகள் | |
நாடு | இந்தியா |
மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள் | பெரும்பான்மை: ஆந்திரப் பிரதேசம் தெலங்காணா சிறுபான்மை: கருநாடகம் கேரளம் ஒடிசா தமிழ்நாடு மகாராட்டிரம் |
பகுதி | தென்னிந்தியா |
இராச்சியம் (மூலம்) | ரெட்டிப் பேரரசு |
ரெட்டி (Reddy) ( ரட்டி, ரெட்டி, ரெட்டியார், ரெட்டப்பா, ரெட்டி ) என்பது இந்தியாவில் தோன்றிய ஒரு சாதியாகும். இவர்கள் முக்கியமாக ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்காணாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் முன்னேறிய வகுப்பினராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களின் தோற்றம் இராஷ்டிரகூடர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுகுறித்து கருத்து வேறுபடுகளும் உள்ளன. இவர்கள் நிலப்பிரபுக்களாகவும், விவசாய நில உரிமையாளர்களாகவும் இருக்கின்றனர். [1] [2] வரலாற்று ரீதியாக இவர்கள் கிராமங்களின் நில உடைமை பிரபுக்களாக இருந்துள்ளனர். [3] [4] [5] பாரம்பரியமாக, இவர்கள் வணிகர்களாகவும், பல்வேறு விவசாய சமூகமாகவும் இருந்தனர். [1] [6] [7] ஆட்சியாளர்களாகவும், போர்வீரர்களாகவும் இவர்களின் திறமை தெலுங்கு வரலாற்றில் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. [8] ரெட்டி வம்சம் (1325-1448 கி.பி) நூறு ஆண்டுகளுக்கும் மேலாக கடலோர ஆந்திரா மற்றும் நடு ஆந்திராவை ஆட்சி செய்தது.
பிரெஞ்சு வரலாற்றாசிரியர் ஆலன் டேனியல் மற்றும் கென்னத் கரி ஆகியோரின் கூற்றுப்படி, இராஷ்டிரகூட மற்றும் ரெட்டி வம்சங்கள் இருவரும் இராஷ்டிரியர்களின் முந்தைய வம்சத்தில் இருந்து வந்திருக்கலாம். [9] இந்த பொதுவான தோற்றம் எந்த வகையிலும் நிச்சயமற்றது: இராஷ்டிரகூடர்களின் வழி வட இந்தியாவில் யாதவர்களிடமிருந்து வந்தது என்பதற்கான சான்றுகள் உள்ளன. மேலும் அவர்கள் ஒரு பொதுவான பட்டத்தை வைத்திருந்திருக்கலாம். இந்த மாற்றுக் கோட்பாடுகளில் ஏதேனும் ஒன்று அவர்களுக்கும் ரெட்டிகளுக்கும் இடையே உள்ள தொடர்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும். [10]
1956 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசம் உருவாவதற்கு முன்னரும் அதற்குப் பின்னரும் கம்மவார் மற்றும் ரெட்டி சாதியினர் அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தி வந்தனர். [11] நவீன இந்தியாவின் இந்தியாவில் இட ஒதுக்கீடு அமைப்பில் ரெட்டிகள் முற்போக்கு சாதியாக வகைப்படுத்தப்படுகிறார்கள். [12] இவர்கள் ஆந்திரப் பிரதேசத்தில் அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் சமூகமாக உள்ளனர். இவர்களின் எழுச்சி 1956 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் உருவானதில் இருந்து தொடங்குகிறது [13]