ரெட்டை வால் குருவி | |
---|---|
சுவரோவியம் | |
இயக்கம் | பாலு மகேந்திரா |
தயாரிப்பு | அப்துல் காதர் |
திரைக்கதை | பாலு மகேந்திரா |
இசை | இளையராஜா |
நடிப்பு | மோகன் ராதிகா அர்ச்சனா |
ஒளிப்பதிவு | பாலு மகேந்திரா |
படத்தொகுப்பு | பாலு மகேந்திரா |
கலையகம் | சாகர் கம்பைன்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 27, 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ரெட்டை வால் குருவி (Rettai Vaal Kuruvi) என்பது 1987 ஆம் ஆண்டில் வெளி வந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். பாலு மகேந்திரா இயக்கிய இந்தப் படத்தில் மோகன், ராதிகா சரத்குமார், அர்ச்சனா (நடிகை), வி. கே. ராமசாமி முதலியோர் நடித்தார்கள். மிக்கி அண்ட் மாவுட் என்ற ஆலிவுட் திரைப்படத்தின் தமிழ் வடிவம் ஆகும்[1].
இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
மதராசில் உள்ள நேஷனல் டி.வி. நிலையத்தில் பணி புரிந்து வருகிறான் கோபி (மோகன் (நடிகர்)). கோபியின் நெருங்கிய தோழர் மார்கபந்து (வி. கே. ராமசாமி) ஆவார். கோபியின் அத்தை மகளான துளசியை (அர்ச்சனா (நடிகை)) மணந்திருந்தான். அப்போது, பிரபல பாடகி ராதாவை சந்திக்க நேரிடுகிறது. அவர்களது பழக்கம் நெருக்கமாகி, இருவரும் விரும்பத் துவங்கினர்.
துளசிக்கு தெரியாமல் ராதாவையும் மணமுடித்த கோபி. ஒரே நேரத்தில் இரு குடும்பங்களையும் நடத்துகிறான். இரு மனைவிகளையும் ஒரே சமயத்தில் சமாளிக்கத் தெரியாமல் பல இன்னல்களுக்கு உள்ளாகுகிறான். அவ்வாறாக ஒரு சமயம், இரு மனைவிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். இருவருக்கும் குழந்தையும் பிறந்துவிடுகிறது. இறுதியில், இருத்திருமணம் குறித்து தெரிய வந்ததா? இரு மனைவிகளும் கோபியை ஏற்றுக்கொண்டார்களா? என்பதே மீதிக் கதையாகும்.
நடனம் - ஜீவா, பவுல்ராஜ், (உதவி) சேகர், சியாமளா
இத் திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு இசை அமைத்தவர் இளையராஜா[5] ஆவார். "இராஜ இராஜ சோழன்" எனும் பாடல் கீரவாணி இராகத்திலும்[6], "கண்ணன் வந்து" எனும் பாடல் நடபைரவி இராகத்திலும் அமைக்கப்பட்டன.
தமிழ் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "இராஜ இராஜ சோழன்" | மு. மேத்தா | கே. ஜே. யேசுதாஸ் | 4:55 | ||||||
2. | "கண்ணன் வந்து பாடுகின்றான்" | நா. காமராசன் | எஸ். ஜானகி | 4:11 | ||||||
3. | "சுதந்திரத்த வாங்கி புட்டோம்" | கங்கை அமரன் | பி. ஜெயச்சந்திரன், கே. எஸ். சித்ரா, Saibaba | 5:42 | ||||||
4. | "தத்தெடுத்த முத்து பிள்ளை" | கங்கை அமரன் | பி. சுசீலா, கே. எஸ். சித்ரா | 4:36 |
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)
^ Rettai Vaal Kuruvi, IMDb, retrieved 2008-11-17