ரெண்டும் ரெண்டும் அஞ்சு Rendum Rendum Anju | |
---|---|
![]() தலைப்பு அட்டை | |
இயக்கம் | ஜெயபாரதி |
தயாரிப்பு | இராஜபாளையம் ஜனகராஜ் |
கதை | ஆர். கோதண்டராமன் (வசனம்) |
திரைக்கதை | ஜெயபாரதி |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | சரத் பாபு அம்பிகா |
ஒளிப்பதிவு | ஆர். எம். இரமேஷ் |
படத்தொகுப்பு | எஸ். நடராஜன் |
கலையகம் | தனலட்சுமி மூவி மேக்கர்சு |
வெளியீடு | 3 சூன் 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ரெண்டும் ரெண்டும் அஞ்சு (Rendum Rendum Anju) என்பது 1988 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் உளவியல் பரபரப்பூட்டும் திரைப்படமாகும்.[1] இப்படத்தில் ஜெயபாரதி இணை எழுத்தாளராகவும் இயக்குநராகவும் பங்காற்றினார். இப்படத்தில் சரத்பாபு, அம்பிகா ஆகியோர் நடித்திருந்தனர். சந்திரசேகர், நாசர், வெண்ணிற ஆடை மூர்த்தி , செந்தில் லியோ பிரபு ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1988 சூன் 3 அன்று வெளியிடப்பட்டது.
ரெண்டும் ரெண்டும் அஞ்சு ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் வெர்டிகோ (1958) திரைப்படத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இத்திரைப்படத்திற்காக தான் முதலில் விஜயகாந்தை அணுகியதாக ஜெயபாரதி தெரிவித்தார், "ஆனால் அவரிடமிருந்து எனக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை", என்று தெரிவித்த அவர் சரத் பாபு, அம்பிகா, நாசர், வெண்ணிற ஆடை மூர்த்தி போன்ற நட்சத்திரக் கலைஞர்களைக் கொண்டு படத்தை உருவாக்கி 50 நாட்களுக்குள் படப்பிடிப்பை முடித்தார்.[2]
இத்திரைப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார். கவிஞர் வாலி பாடல் வரிகளை எழுதியிருந்தார். [3][4]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "கானக் கருங்குயிலே" | மலேசியா வாசுதேவன், மனோ, கே. எஸ். சித்ரா, எஸ். என். சுரேந்தர் | 4:13 | |||||||
2. | "பன்னீர் பூவின்" | கே. எஸ். சித்ரா | 4:28 | |||||||
3. | "எதுக்கும் ஒரு" | கே. எஸ். சித்ரா | 3:59 | |||||||
4. | "வளர்பிறை" | மனோ | 4:21 | |||||||
மொத்த நீளம்: |
17:01 |
ரெண்டும் ரெண்டும் அஞ்சு 1988 சூன் 3 அன்று வெளியிடப்பட்டது. மேலும் குறைந்த அளவிலான வெளியீட்டைக் கொண்டிருந்தது.[5][6] கல்கி இதழின் இரட்டையர்கள் ஜெயமன்மதன் வித்தியாசமான கதையைச் சொல்ல விரும்பியதற்காக ஜெயபாரதியைப் பாராட்டினர். திரைப்படத்தின் இசையைப் பாராட்டி படத்தின் முதல் பாதி பொழுதுபோக்காக இருந்தது. ஆனால் இடைவேளைக்குப் பிறகு அது தடுமாறியது என்று கூறினர்.[7]