ரெம்பாவ் (P131) மலேசிய மக்களவைத் தொகுதி நெகிரி செம்பிலான் | |
---|---|
Rembau (P131) Federal Constituency in Negeri Sembilan | |
ரெம்பாவ் மக்களவைத் தொகுதி (P131 Rembau) | |
மாவட்டம் | ரெம்பாவ் மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 133,515 (2023)[1][2] |
வாக்காளர் தொகுதி | ரெம்பாவ் தொகுதி |
முக்கிய நகரங்கள் | ரெம்பாவ், செம்போங், கோத்தா |
பரப்பளவு | 635 ச.கி.மீ[3] |
முன்னாள் நடப்பிலுள்ள தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
கட்சி | பாரிசான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | முகமட் அசன் (Mohamad Hasan) |
மக்கள் தொகை | 210,209[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2004 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
ரெம்பாவ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Rembau; ஆங்கிலம்: Rembau Federal Constituency; சீனம்: 林茂国会议席) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், ரெம்பாவ் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P131) ஆகும்.[5]
ரெம்பாவ் மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
2004-ஆம் ஆண்டில் இருந்து ரெம்பாவ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
ரெம்பாவ் மாவட்டம், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் ஒன்றாகும். ரெம்பாவ் மாவட்டத்தின் முக்கிய நகரம் ரெம்பாவ் நகரம். கோலாலம்பூர் மாநகரில் இருந்து தெற்கே 95 கி.மீ. தொலைவிலும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகர் சிரம்பானில் இருந்து 23 கி.மீ. தொலைவிலும் ரெம்பாவ் நகரம் அமைந்து உள்ளது.
ரெம்பாவ் ஆளுநர் இன்று வரையிலும் பழைய மினாங்கபாவு முறையில் மாவட்ட ஆட்சியாளராக நியமிக்கப் படுகிறார். ரெம்பாவ் மாவட்டத் தலைவர் பெங்குலு என்று முன்பு அழைக்கப் பட்டார். தற்போது யாங் தெர் அமாட் மூலியா உண்டாங் லுவாக் ரெம்பாவ் (Yang Teramat Mulia Undang Luak Rembau) என்று அழைக்கப் படுகிறார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மன்னர் யாங் டி பெர்துவான் பெசார் (Yang di-Pertuan Besar of Negeri Sembilan). நெகிரி செம்பிலான் அரியணைக்குத் தேர்ந்தெடுக்கப் படுபவர்களில் யாங் தெர் அமாட் மூலியா உண்டாங் லுவாக் ரெம்பாவ் என்பவரும் ஒருவராவார்.
ரெம்பாவ் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (2004 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
2003-ஆம் ஆண்டில் ரெம்பாவ் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
11-ஆவது மக்களவை | P131 | 2004–2008 | பிர்தாவுஸ் முகமட் ரோம் அருண் (Firdaus Muhammad Rom Harun) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
12-ஆவது மக்களவை | 2008–2013 | கைரி ஜமாலுதீன் (Khairy Jamaluddin) | ||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | முகமட் அசன் (Mohamad Hasan) |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
முகமட் அசன் (Mohamad Hasan) | பாரிசான் நேசனல் | 53,075 | 48.50 | 0.37 ▼ | |
சுபித்திரி ஜோகா (Jufitri Joha) | பாக்காத்தான் அரப்பான் | 33,178 | 30.32 | 12.05 ▼ | |
முகமட் நசுரி முகமட் யூனுஸ் (Mohd Nazree Mohd Yunus) | பெரிக்காத்தான் நேசனல் | 21,875 | 19.99 | 19.99 | |
தினகரன் சுப்ரமணியம் (Tinagaram Subramaniam) | மலேசிய சமூகக் கட்சி | 779 | 0.71 | 0.71 | |
ரம்லி அவலுதீன் (Ramly Awalludin) | தாயக இயக்கம் | 529 | 0.48 | 0.48 | |
மொத்தம் | 1,09,436 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 1,09,436 | 98.96 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 1,150 | 1.04 | |||
மொத்த வாக்குகள் | 1,10,586 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 1,33,555 | 81.94 | 3.29 ▼ | ||
பாரிசான் நேசனல் கைப்பற்றியது | |||||
மூலம்: [8] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)