ரேடியோப்பெட்டி | |
---|---|
இயக்கம் | ஹரி விஸ்வநாத் |
தயாரிப்பு | ஹர்ரே டூன்ஸ் ஸ்டுடியோ |
கதை | ஹரி விஸ்வநாத் |
இசை | ரிச்சர்ட் ஃபோர்ட் [1] |
நடிப்பு | லட்சிமணன் டிவிவி ராமானுஜம் சோபனா மோகன் நிவாஸ் ஆதித்தன் |
ஒளிப்பதிவு | சரவணன் நடராசன் |
படத்தொகுப்பு | வெங்கடராம் மோகன் |
கலையகம் | ஹர்ரே டூன்ஸ் ஸ்டுடியோ |
வெளியீடு | 2015 |
ஓட்டம் | 83 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ரேடியோப்பெட்டி (Radio Set) என்பது 2015 ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தப் படத்தை ஹரி விஸ்வநாத் இயக்கியுள்ளார், முன்னணி பாத்திரங்களில் டிவிவி ராமானுஜம் மற்றும் கொரட்டூர் லட்சுமணன் ஆகியோர் நடித்துள்ளனர்.[2][3]
இந்தப் படம் 2015 ஆண்டு பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வ போட்டியில் கலந்துகொண்டு கேஎன்என் பார்வையாளர் விருதை வென்றது. இவ்விருது பெற்ற முதல் தமிழ் திரைப்படம் இதுவே ஆகும்,[4][5][6][7][8] மற்றும் இந்தியன் பனோரமாவால் அதிகாரப்பூர்வமாக கோவாவில் நடந்த 46வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ளத் தேர்வு செய்யப்பட்டது.[9][10][11]
ரேடியோப்பெட்டி படம் எழுபது வயது முதியவரின் கதை. இவருக்கு சற்று காது கேட்காது, ஆனால் வானொலி கேட்பது பிடிக்கும். இவர் சிறுவனாக இருந்தபோது அவர் தந்தை அவருக்குப் பரிசாகத் தந்த வானொலிப் பெட்டி அது. அந்த வானொலிப் பெட்டியின் வழியாக அவர் தன் தந்தையைப் பார்க்கிறார். இந்த வானொலியை இழக்கும் போது அவர் உளரீதியாகக் கலங்கி விடுகிறார்.[12]
ரேடியோப்பெட்டி படம் புதுச்சேரியில் 15 நாட்களில் ஒரு கோடி செலவில் படமாக்கப்பட்டது.
ஆண்டு | விழா | பிரிவு | முடிவு |
---|---|---|---|
2015 | பூசன் சர்வதேச திரைப்பட விழா | பார்வையாளர் விருது [13][14] | வெற்றி |
புதிய வரவு [15] | பரிந்துரை | ||
2015 | இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவா | இந்தியன் பனோரமா [9] | அதிகாரப்பூர்வ தேர்வு |
2016 | இமேஜ் இந்தியா திரைப்பட விழா, மத்ரித், எசுப்பானியா | சிறந்த இசை | வெற்றி |
சிறந்த திரைப்படம் | வெற்றி | ||
2016 | சென்னை சர்வதேசத் திரைப்பட விழா [16] | 2வது சிறந்த திரைப்படம் [17] | வெற்றி |
ஸ்பெசல் ஜூரி சிறந்த நடிகர் | வெற்றி | ||
சிறந்த படம் | வெற்றி | ||
2016 | ஹைடன் ஜெம் திரைப்பட விழா, கால்கரி, கனடா | சிறந்த இயக்குநர் | பரிந்துரை |
2016 | ஆரோ திரைப்பட விழா, ஆரோவில் | அதிகாரப்பூர்வ தேர்வு | |
2016 | பூனே உலக திரைப்பட விழா | அதிகாரப்பூர்வ தேர்வு | |
2016 | திரைப்பட விழா உருமேனியா | அதிகாரப்பூர்வ தேர்வு | |
2016 | புதுச்சேரி அரசு 'இந்தியன் பனோரமா' திரைப்பட விழா | சிறந்த படம் | வெற்றி |