ரேணுகா சிங் சாருதா | |
---|---|
பழங்குடியினர் விவகாரத்துறைக்கான இணை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 30 மே 2019 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | ஜஸ்வந்த்சின்சுமன்பாய் பாபார் |
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
முன்னையவர் | கமல்பான் சிங் மராபி |
தொகுதி | சர்குஜா பாராளுமன்றத் தொகுதி |
மாநில இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) மகளிர் & குழந்தைகள் வளர்ச்சி மற்றும் குடும்ப நலத்துறை, சத்தீஸ்கரி அரசு | |
பதவியில் 7 திசம்பர் 2003 – 18 சூன் 2005 | |
பின்னவர் | லதா உசேண்டி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 சனவரி 1964 பொடி, கோரியா மாவட்டம், மத்தியப்பிரதேசம், இந்தியா (தற்பொழுது சத்தீசுகர், இந்தியா) |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | நரேந்திர சிங் |
பிள்ளைகள் | 2 மகன்கள் & 2 மகள்கள் |
வாழிடம்(s) | இராமானுஜ் நகர், சர்குஜா மாவட்டம், சத்தீசுகர், இந்தியா |
தொழில் | அரசியல்வாதி, விவசாயி |
ரேணுகா சிங் (Renuka Singh) (பிறப்பு: ஜனவரி 5, 1964) சத்தீஸ்கரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் ஆவார். நரேந்திர மோடியின் அமைச்சில் பழங்குடியினர் தொடர்பான அமைச்சகத்தின் இணை அமைச்சராக உள்ளார் .
ரேணுகா முதலில் 2003 ஆம் ஆண்டில் சத்தீஸ்கர் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி, குடும்ப நலத்துறை அமைச்சராக பணியாற்றினார். 2008 ஆம் ஆண்டில் அவர் சத்தீஸ்கர் சட்டமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2] 2013 சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் மூத்த தலைவர் கெல்சாய் சிங்கிடம் தோல்வியடைந்தார். 2019 இந்தியப் பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில், அவர் மீண்டும் கெல்சாய் சிங்குக்கு எதிராக போட்டியிட்டு 1,57,873 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சின் மத்திய அமைச்சரானார். [3]