ரேணுகா ராய் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1957–1967 | |
முன்னையவர் | சுரேந்திர மோகன் கோஷ் |
பின்னவர் | உமா ராய் |
தொகுதி | மால்டா மக்களவைத் தொகுதி, மேற்கு வங்காளம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1904 வங்காள மாகாணம் |
இறப்பு | 1997 |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பெற்றோர் | சதீஷ் சந்திர முகர்ஜி |
விருதுகள் | பத்ம பூசண் |
ரேணுகா ராய் (Renuka Ray;1904-1997) இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரரும், சமூக ஆர்வலரும், அரசியல்வாதியும் ஆவார்.[1]
பிரம்ம சமாஜத் சீர்திருத்தவாதியான, நிபரன் சந்திர முகர்ஜிக்கும் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியும் சதீஷ் சந்திர முகர்ஜியின் மகளும் சமூக சேவகரும் அகில இந்திய மகளிர் மாநாட்டின் உறுப்பினருமான சாருலதா முகர்ஜிக்கும் மகளாகப் பிறந்தர். 1988 ஆம் ஆண்டில் இந்திய அரசால் இவருக்கு பத்ம பூசண் வழங்கப்பட்டது.[2]
இவர் தனது பதினாறாவது வயதில் மகாத்மா காந்தியுடன் தொடர்பு கொண்டார். அவரால் பெரிதும் செல்வாக்குப்பட்டார். பிரித்தானிய இந்திய கல்வி முறையை புறக்கணிக்க காந்திஜியின் அழைப்பிற்கு பதிலளிக்க இவர் கல்லூரியை விட்டு வெளியேறினார். இருப்பினும், பின்னர் இவருடைய பெற்றோர் காந்தியடிகளிடம் சொல்லி மேலதிக படிப்புக்காக இலண்டன் செல்லும்படி இவரை வற்புறுத்தியபோது, இவர் 1921இல் இலண்டன் பொருளியல் பள்ளியில் சேர்ந்தார்.[3] இவர் தனது சிறு வயதிலேயே சத்யேந்திர நாத் ராய் என்பவரை மணந்தார். [4] [5]
இவருடைய தாய்வழி தாத்தாவும் பாட்டியும் அவர்கள் காலத்தில் மிகவும் புகழ்பெற்றவர்களாக இருந்தனர். தாய்வழி தாத்தா பேராசிரியர். பி. கே. ராய் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் டி பில் பெற்ற முதல் இந்தியரும் இந்திய கல்வி சேவையின் உறுப்பினரும், கொகத்தாவின் புகழ்பெற்ற மாநிலக் கல்லூரியின் முதல் இந்திய முதல்வரும் ஆவார். தாய்வழி பாட்டி சரளா ராய் நன்கு அறியப்பட்ட சமூக சேவகர். அவர் பெண்களின் விடுதலைக்காக உழைத்தார். கோகலே நினைவுப் பள்ளி மற்றும் கல்லூரியின் நிறுவனரும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழுவில் உறுப்பினரான முதல் இந்தியப் பெண்ணும் ஆவார். சரளா ராய் புகழ்பெற்ற பிரம்ம சீர்திருத்தவாதி துர்காமோகன் தாஸின் மகளும், லேடி அபலா போஸ், எஸ்.ஆர்.தாஸ் ஆகியோரின் சகோதரியும், புகழ்பெற்ற தூன் பள்ளியின் நிறுவரும் தேசபந்து சித்தரஞ்சன் தாஸின் உறவினருமாவார்.
இவரது உடன்பிறந்தவர்களில் சுப்ரத்தோ முகர்ஜி டோக்கியோவில் இறந்த இந்திய விமானப்படையின் முதல் விமானப்படை தளபதி ஆவார். விஜய லட்சுமி பண்டிட் , இரயில்வே வாரியத்தின் தலைவரும் கேசவ சந்திர சென்னின் பேத்தி வயலெட்டை மணந்த பிரசாந்த முகர்ஜி ஆகியோரின் மருமகளான சாரதா முகர்ஜியை (என்கிற பாண்டிட்) திருமணம் செய்துகொண்டார். இவரது இளைய சகோதரி நிதா சென்னின் மகள் கீதி சென் ஒரு புகழ்பெற்ற கலை வரலாற்றாசிரியராவர்.
இந்தியா திரும்பியதும், இவர் அகில இந்திய மகளிர் மாநாட்டில் சேர்ந்தார். பெற்றோரின் சொத்தில் பெண்களின் உரிமைகள் மற்றும் பரம்பரை உரிமைகளை வென்றெடுக்க கடுமையாக உழைத்தார். 1932இல் அகில இந்திய மகளிர் மாநாட்டின் தலைவரானார். இவர் 1953-54 ஆண்டுகளில் அதன் தலைவராகவும் இருந்தார். [5]
1943ஆம் ஆண்டில் இவர் இந்தியப் பெண்களின் பிரதிநிதியாக மத்திய சட்டமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டார். இவர் 1946-47 இல் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினராகவும் இருந்தார்.[5]
இவர் 1952-57 ஆண்டுகளில் மேற்கு வங்கத்தின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் மால்டா மக்களவைத் தொகுதியிலிருந்து 1957-1967 ஆண்டுகளில் மக்களவை உறுப்பினராக இருந்தார். 1959ஆம் ஆண்டில் இவர் சமூக நலன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலன் குறித்த குழுவுக்கு தலைமை தாங்கினார். இது ரேணுகா ராய் குழு என பிரபலமாக அறியப்பட்டது.[6] [7]
இவர் என் நினைவுகள்: காந்திய காலத்திலும் அதற்குப் பிறகும் சமூக மேம்பாடு என்ற புத்தகத்தின் ஆசிரியராவார்.