ரேனிகுண்டா | |
---|---|
இயக்கம் | ஆர். பன்னீர்செல்வம் |
தயாரிப்பு | எஸ். மகேந்திர குமார் ஜெயின் |
கதை | சிங்கம்புலி (வசனம்) |
திரைக்கதை | ஆர். பன்னீர்செல்வம் |
இசை | கணேஷ் ராகவேந்திரா |
நடிப்பு | ஜானி சனுஷா நிஷாந்த்,தமிழ்ச்செல்வம் |
ஒளிப்பதிவு | சக்தி |
படத்தொகுப்பு | ஆண்டோனி |
கலையகம் | பிலிம் பேப்ரிகேட்டர்ஸ் |
விநியோகம் | எஸ். எஸ். சக்கரவர்த்தி |
வெளியீடு | திசம்பர் 4, 2009 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ரேனிகுண்டா (Renigunta) 2009இல் தமிழ் மொழியில் வெளிவந்த அதிரடித் திரைப்படம் ஆகும். இதை எழுதி இயக்கியவர் ஆர். பன்னீர்செல்வம், இப்படத்தில் ஜானி, சனுஷா, மற்றும் தமிழ்ச்செல்வம், நிஷாந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.[1][2] இளம் குற்றவாளிகள், குற்றங்களை செய்ய தூண்டிய காரணங்களை பற்றிய படமாகும். ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ரேணிகுண்டா என்ற நகரத்தின் பெயரைக் கொண்டது, அங்கு நடக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியை பிரதிபலிக்கிறது. 2012இல் இப்படம் தெலுங்கு மொழியில் மாற்றம் செய்து ஆந்திரப் பிரதேசத்தில் வெளியிடப்பட்டது.[3] 2016இல் "மாண்டியா டு மும்பை" என்ற பெயரில் கன்னட மொழியில் வெளியிடப்பட்டது.
இப்படத்தின் கதை தமிழ்நாட்டின் மதுரையில் தொடங்குகிறது, சக்தி (ஜானி), தனது பெற்றோருடன் மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்துகிறான். ஒரு அதிர்ச்சி சம்பவம் அவனது வாழ்க்கையை மாற்றுகிறது, அவனது பெற்றோர்கள் சமூக விரோத சக்திகளால் படுகொலை செய்யப்படுகின்ற்னர். அதற்கு சக்தி பழிவாங்க முற்படும்போது, அவன் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுகிறான், அங்கே காவலாளிகளால் கடுமையாக தாக்கப்படுகிறான். சிறையில் இருக்கும்போது, அவன் நான்கு இளம் குற்றவாளிகளான பாண்டுரங்கன் என்கிற பாண்டு (நிஷாந்த்), பிரேம் குமார் என்கிற தாபா (தீபெட்டி கணேசன்), மாரி (தமிழ்) மற்றும் மைக்கேல் (சந்தீப்) ஆகியோருடன் நட்புடன் இருக்கிறான். சிறைச்சாலைகளில் இருந்த குற்றவாளிகள் சிறைக்கதவுகளை உடைத்து வெளியேறும் போது , சக்தியும் அவனது நண்பர்களும் அவர்களைப் பின்தொடர்ந்து தப்பிக்கிறார்கள், மேலும் சக்தி தனது பெற்றோரின் கொலையாளிகளுக்கு பழிவாங்குவதற்கு முயல்கிறான். பின்னர், அவர்கள் மும்பைக்கு செல்ல நினைக்கிறார்கள்..[4] அவர்கள் ரேனிகுண்டாவில் இறங்க வேண்டி வருகிறது, அவர்கள் கொலையாளிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் மத்தியஸ்தராக செயல்படும் பங்கர் என்பவனிடம் போய் சேர்கிறார்கள். பிறகு அவர்களின் நடக்கும் மாற்றங்களே மீதிக்கதையாகும்.
படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைத்திருந்தார் மற்றும் பாடல்களை பிறைசூடன், யுகபாரதி மற்றும் நா. முத்துக்குமார் ஆகியோர் எழுதியிருந்தனர்.[6]
"ரேனிகுண்டா" மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.,[7] 2009 ஆம் ஆண்டின் சிறந்த இலாபகரமான தமிழ் திரைப்படமாக, 0.65 கோடி லாபம் ஈட்டியது.[8]
ரிஷா / நந்தா சரவணன் / இளங்கோ / சுஜாதா
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)