ரேபிட் கேஎல் Rapid KL | |||
---|---|---|---|
பத்துமலைக்கு அருகில் Hyundai Rotem EMU Set 216 ரக ரேபிட் கேஎல் தொடர் வண்டி | |||
பொது தகவல் | |||
உரிமையாளர் | பிரசரானா மலேசியா | ||
முக்கிய இடங்கள் | கிள்ளான் பள்ளத்தாக்கு, மலேசியா | ||
பயண வகை |
| ||
தடங்களின் எண்ணிக்கை | |||
நிறுத்தங்கள் |
| ||
தினசரி பயணிகள் |
| ||
இணையதளம் | myrapid | ||
செயற்பாடு | |||
தொடக்கம் | 1996 2004 (பொதுமக்கள் சேவை)[1] | (ரேபிட் சேவை) ||
நடத்துநர்(கள்) |
| ||
தொழிநுட்பத் தரவுகள் | |||
திட்ட நீளம் |
| ||
தட அளவி | 1,000 மிமீ (3 அடி 3 3⁄8 அங்) | ||
மின்வசதி | 750 V DC | ||
|
ரேபிட் கேஎல் (ஆங்கிலம்: Rapid KL அல்லது Kuala Lumpur Rapid Integrated Transport Network மலாய்: Rangkaian Pengangkutan Integrasi Deras Kuala Lumpur); சீனம்: 快捷通軌道) என்பது பிரசரானா மலேசியா (Prasarana Malaysia) எனும் நிறுவனத்திற்விற்குச் சொந்தமான பொது போக்குவரத்து அமைப்பாகும். அந்த நிறுவனத்தின் ரேபிட் ரெயில் மற்றும் ரேபிட் பேருந்து துணை நிறுவனங்களின் மூலம் இயக்கப்படுகிறது.[2]
கோலாலம்பூர் மற்றும் கிளாங் பள்ளத்தாக்கு பகுதிகள் முழுவதும் ரேபிட் கேஎல் தொடருந்துச் சேவையின் பயன்பாடுகள் உள்ளன. கோலாலம்பூரில் பொதுப் போக்குவரத்து அமைப்புகளை மலேசிய மத்திய அரசு மறுசீரமைப்பு செய்ததைத் தொடர்ந்து ரேபிட் கேஎல் தொடருந்துச் சேவை தொடங்கப்பட்டது.[3]
2003-ஆம் ஆண்டில் இந்திரா கோத்தா (Intrakota) மற்றும் சிட்டி லைனர் (Cityliner) சேவைகளுக்குச் சொந்தமான பேருந்து சேவைகள் மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் பிரசரானா மலேசியா நிறுவனம் தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டது. 2007-ஆம் ஆண்டில், கேஎல் இன்பராசிட்ரக்சர் (KL Infrastructure Group) எனும் குழுமம் திவாலானது.[4]
அந்தக் குழுமத்தை மலேசிய அரசாங்கம் மீட்டு எடுத்தது. மீட்டு எடுத்த பின்னர் அந்தக் கட்டமைப்புக் குழுமத்தை பிரசரானா மலேசியா நிறுவனத்தின் கீழ் கொண்டு வந்தது.
கோலாலம்பூர் பெருநகரின் நடுத்தர திறன் கொண்ட தொடருந்து இயக்கமானது (Medium Capacity Rail System) அதன் தொடக்கத்தில் இருந்து; எதிர்பார்த்ததை விட குறைவான பயணிகளைக் கொண்டிருந்தது. இதனால் தொடருந்து இயக்குநர்களான அலிரான் ரிங்கான் நிறுவனம் (Sistem Transit Aliran Ringan Sdn Bhd) (STAR-LRT) மற்றும் உசகசாமா நிறுவனம் (Projek Usahasama Transit Ringan Automatik Sdn Bhd) (PUTRA-LRT) ஆகியவை தங்களின் வணிகக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனது.
1997 ஆசிய நிதி நெருக்கடி நிலைமையை மேலும் மோசமாக்கியது. நவம்பர் 2001-இல், இரண்டு நிறுவனங்களும் மொத்தமாக RM 5.7 பில்லியன் கடனில் இருந்தன. அந்த இரண்டு நிறுவனங்களின் கடன்களை மறுசீரமைக்க மலேசிய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டது.
2002-இல், அந்த இரண்டு நிறுவனங்களும்; அவற்றின் சேவைகளும் பிரசரானா மலேசியா நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. பின்னர் அந்தச் சேவைகளும் நிறுவனங்களும் ரேபிட் கேஎல் நிறுவனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன.
மலேசிய அரசாங்கம், கேஎல் இன்பராசிட்ரக்சர் குழுமத்தை RM 822 மில்லியன் நிதியுடன் பிணை எடுத்தது. பின்னர் கேஎல் இன்பராசிட்ரக்சர் குழுமம், பிரசரானா மலேசியா நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது மற்றும் ரேபிட் ரெயில் மூலம் இயக்கப்பட்டது.[5]
கோலாலம்பூர் பெருநகரின் பேருந்து சேவையும் குறைந்த பயணிகளால் பிரச்சனைகளை எதிர்கொண்டது. தனியார் கார் பயன்பாட்டு அதிகரிப்பு மற்றும் மூலதன முதலீடுகளின் பற்றாக்குறை ஆகியவை அந்தப் பிரச்சினைகளுக்கு காரணமாகும்.
கோலாலம்பூரின் புதிய பேருந்து நிறுவனங்களான இந்திரா கோத்தா கொம்பசிட் பேருந்து நிறுவனம் (Intrakota Komposit) மற்றும் சிட்டி லைனர் நிறுவனம் (Cityliner) ஆகியவை நிதி சிக்கல்களை எதிர்கொண்டன. 1997 ஆசிய நிதி நெருக்கடியினால் இந்திரா கோத்தா கொம்பசிட் பேருந்து நிறுவனம் RM 450 மில்லியன் இழப்புகளில் சிக்கியது.
2003-ஆம் ஆண்டில், அந்த இழப்புகளுக்கு பிரசரானா மலேசியா நிறுவனம் பொறுப்பேற்றது. குறைந்த வருவாய் காரணமாக, பேருந்து நிறுவனங்களின் நடத்துநர்கள் தங்கள் பேருந்துகளை பராமரிக்க முடியவில்லை. மேலும் பேருந்துகளில் முதலீடு செய்வதும் குறைவானது.
பேருந்துகள் அடிக்கடி பழுதடையத் தொடங்கியதால் வருமானமும் சேவையும் மோசம் அடைந்தன. இதன் விளைவாக பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்தது. கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் பொது போக்குவரத்துப் பயன்பாடு ஏறக்குறைய 16% குறைந்தது.
குறியீடு | தடம் | நிலையம் | நீளம் | தொடக்கம் | தொடக்க நிலையம் - முடிவு நிலையம் | ||
---|---|---|---|---|---|---|---|
அம்பாங் வழித்தடம் | 18 |
18 கிமீ |
16 திசம்பர் 1996 | செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையம் | அம்பாங் எல்ஆர்டி நிலையம் | ||
செரி பெட்டாலிங் வழித்தடம் | 29 |
45.1 கிமீ |
11 Jசூலை 1998 | செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையம் | புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் | ||
கிளானா ஜெயா வழித்தடம் | 37 |
46.4 கிமீ |
1 செப்டம்பர் 1998 | கோம்பாக் எல்ஆர்டி நிலையம் | புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் | ||
கோலாலம்பூர் மோனோரெயில் | 11 |
8.6 கிமீ |
31 ஆகத்து 2003 | கோலாலம்பூர் சென்ட்ரல் | தித்திவாங்சா | ||
காஜாங் வழித்தடம் | 29 |
47 கிமீ |
16 திசம்பர் 2016 | குவாசா டாமன்சாரா | காஜாங் | ||
புத்ராஜெயா வழித்தடம் | 36 |
57.7 கிமீ |
16 சூன் 2022 | குவாசா டாமன்சாரா | புத்ராஜெயா சென்ட்ரல் | ||
சன்வே விரைவுப் பேருந்து வழித்தடம் | 7 |
5.6 கிமீ |
2 சூன் 2015 | சன்வே செத்தியா ஜெயா | யுஎஸ்ஜே 7 (USJ 7) | ||
மொத்தம் | 167 |
228.4 கிமீ |