பிராங்க் ரேமண்ட் ஆல்ச்சின் (Frank Raymond Allchin, சூலை 9, 1923 - ஜூன் 4, 2010[1]) என்பவர் பிரித்தானியத் தொல்லியலாளர். இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வுகளில் பெயர் பெற்றவர். இந்திய தொல்லியலில் செம்பு, இரும்பு, பெருங்கல் காலகட்டங்களை வகுத்தும், பகுத்தும் ஆய்ந்தவர். இவர் முதன் முதலாக 1944 ஆம் ஆண்டில் இராணுவத்தில் பணி புரியும் போது இந்தியாவுக்கு சென்றிருந்தார். அன்றில் இருந்து அவருக்கு இந்தியத் தொல்லியல் குறித்த தனது ஆர்வத்தைப் பெருக்கிக் கொண்டார். 1954 முதல் 1959 வரை இலண்டனில் உள்ள கிழக்கத்தைய மற்றும் ஆப்பிரிக்கக் கல்விக்கான பள்ளியில் தெற்காசிய தொல்லியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்னர் 30 ஆண்டுகள் கேம்பிரிட்சில் பேராசிரியராக இருந்தார்.